ரிஸ்வான் மாதிரி கேட்டா அவுட்டைக் கூட தரமாட்டாங்க.. அம்பயர் முன் பாக் கேப்டனை கலாய்த்த.. இஷான் கிசான்

Ishan Kishan
- Advertisement -

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங் செய்பவரின் பங்கு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் போட்டி முழுவதும் உட்கார்ந்து எழுந்து பந்துகளைப் பிடிக்கும் அவர்கள் ஸ்டம்பிங் செய்து, கேட்ச் பிடித்து வெற்றியில் பங்காற்றுவார்கள். மேலும் எல்பிடபுள்யூ போன்ற அவுட் கேட்பதில் விக்கெட் கீப்பர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது. டிஆர்எஸ் எடுக்கும் போது விக்கெட் கீப்பரிடம் கேட்டு விட்டு தான் கேப்டன் ரிவியூ எடுப்பார்.

அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விக்கெட் கீப்பிங்கில் எம்எஸ் தோனி வல்லவராக அறியப்படுகிறார். மேலும் அவர் கேட்டாலே சில நடுவர்கள் சில நேரங்களில் எல்பிடபிள்யூ கொடுத்து விடுவார்கள். ஏனெனில் தோனி எதையும் தேவையின்றி சரியாக இல்லாமல் கேட்க மாட்டார் என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரிஸ்வான் போன்ற கீப்பர்கள் அதற்கு நேர்மாறாக செயல்படக் கூடியவர்கள்.

- Advertisement -

அடிக்கடி கேட்டால் கிடைக்காது:

கடந்த 2023 உலகக் கோப்பையில் பந்தை பேட்ஸ்மேன் தவற விட்ட அத்தனைப் பந்துகளையும் முகமது ரிஸ்வான் அவுட் கேட்டார். அதனால் நடுவர்களே கடுப்பானதை மறக்க முடியாதது. அதன் உச்சமாக முகமது ரிஸ்வான் புறாவைப் போல குதித்து ஒவ்வொரு பந்திலும் தேவையின்றி அவுட் கேட்பார் என்று இந்தியாவை சேர்ந்த நடுவர் அனில் சவுத்ரி 2024 ஆகஸ்ட் மாதம் கொடுத்த பேட்டியில் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இசான் கிசான் பயிற்சி எடுக்கும் மைதானத்தில் அனில் சவுத்ரியும் இருந்துள்ளார். அங்கே இஷான் கிசானிடம் “முன்பெல்லாம் அடிக்கடி நடுவர்களிடம் அவுட் கேட்ட நீங்கள் இப்போது அதை ஏன் குறைத்துக் கொண்டீர்கள்?” என்று அனில் சவுத்ரி கேட்டார். அதற்கு இஷான் கிசான் பாகிஸ்தான் கீப்பர் முகமது ரிஸ்வானை கலாய்க்கும் வகையில் பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

கலாய்த்த கிசான்:

“இப்போதெல்லாம் நடுவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக மாறி விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதாவது ஒவ்வொரு முறையும் நான் அவுட் கேட்டால் நடுவர்கள் உண்மையான அவுட்டைக் கூட தரமாட்டார்கள். அதற்கு மாற்றாக ஒருமுறை மட்டும் கேட்க வேண்டும் அல்லது உண்மையாக அவுட் என்று உணரும் போது மட்டும் கேட்க வேண்டும்”

இதையும் படிங்க: அவங்க மாதிரி ஒரு நியாயம் வேணாமா? ரேட் 10 ஆயிரமா? ரியான் பராக் காலில் விழுந்த ரசிகர் பற்றி ரசிகர்கள் அதிருப்தி

“அப்படி கேட்கும் போது கீப்பர் சரியான நேரத்தில் தான் அவுட் கேட்கிறார் என்ற தன்னம்பிக்கை நடுவர்களுக்கு கிடைக்கும். அதை விட்டுவிட்டு முகமது ரிஸ்வான் போல அடிக்கடி அவுட் கேட்டால் நீங்கள் எனக்கு விக்கெட்டை கொடுக்க மாட்டீர்கள்” என்று புன்னகையுடன் சொன்னார். அதைக் கேட்டு அனில் சௌத்ரி சிரித்தார். மேலும் இஷான் கிசான் பேசும் அந்த பேட்டி வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Advertisement