ரவீந்திர ஜடேஜாவுக்கு வீசிய அந்த 2 பந்தால் எனக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது – மோஹித் சர்மா வருத்தம்

Jadeja
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமாகியது. ஹார்டிக் பாண்டியா தலைமையிலான அந்த அணி தாங்கள் விளையாடிய முதல் சீசனிலேயே கோப்பையை வென்றும் அசத்தியிருந்தனர். அதற்கடுத்து 2023-ஆம் ஆண்டு மீண்டும் தங்களது சிறப்பான ஆட்டம் காரணமாக இறுதிப்போட்டி வரை அந்த அணி முன்னேறியது.

அந்த 2 பந்துகள் இன்னும் எனக்கு கஷ்டத்தை கொடுக்கின்றன – மோஹித் சர்மா

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அந்த மாபெரும் இறுதிப்போட்டியானது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணயானது ரவீந்திர ஜடேஜாவின் அட்டகாசமான சிக்ஸ் மற்றும் பவுண்டரியினால் கடைசி பந்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக தான் வீசிய அந்த இரண்டு பந்தால் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும், தன்மீது கரை விழுந்துள்ளதாகவும் மோகித் சர்மா சில கருத்துக்களை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே அந்த போட்டிக்கு பிறகு எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

சாதாரண போட்டியாக இருந்திருந்தால் நான் பெரிய அளவில் கஷ்டத்தையும் அழுத்தத்தையும் சந்தித்திருக்க மாட்டேன். ஆனால் இறுதிப் போட்டியில் இது போன்ற தோல்வியை சந்தித்தது மனதளவில் மிகப்பெரிய வருத்தம் ஏற்பட்டது. சில விஷயங்கள் நம் மீது கறையை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக நான் வீசிய அந்த இரண்டு பந்துகள் என் மீது கறைபடிய வைத்து விட்டன.

- Advertisement -

அந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் முதல் நான்கு பந்துகள் நான் நினைத்தபடி சரியாக வீச முடிந்தது. ஆனால் கடைசி இரண்டு பந்துகளில் திட்டமிடப்படி வீச முடியாமல் போனதால் போட்டியும் அவர்கள் வசம் சென்றது. இதுவரை நான் அந்த ஓவரை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன். நல்ல விஷயம் என்றால் அது விதி என்று நினைத்துக் கொண்டு போகலாம்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியால் வெளியேற்றப்பட்ட டூபிளெஸ்ஸிஸ்க்கு கவுரவம் வழங்கிய டெல்லி அணி – விவரம் இதோ

அதே போன்று சற்று மோசமான விடயம் நடக்கும்போதும் அதை விதி என்று நினைத்துக் கொண்டு வலைப்பயிற்சிக்கு சென்று செல்ல வேண்டும் என ரோகித் சர்மா கூறினார். மெகா ஏலத்திற்கு முன்னதாக குஜராத் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட அவரை தற்போது டெல்லி அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement