பும்ரா, ரோஹித், கோலி இல்லாமையே இந்தியா ஜெய்க்கும்.. இந்த கம்பேக் தான் காரணம்.. கவாஸ்கர் எச்சரிக்கை

Sunil Gavaskar
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கு தோல்வியே சந்திக்காமல் வென்ற இந்தியா 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பையை முத்தமிட்டது. மேலும் 3 சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் இந்தியா உலக சாதனைப் படைத்தது.

அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முக்கிய பங்காற்றினர். சமீப மாதங்களில் சுமாராக பேட்டிங் செய்த அவர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறாமல் இந்தியா முக்கிய காரணமானார்கள். அதனால் அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று ஒரு தரப்பு இந்திய ரசிகர்களே விமர்சனம் செய்தனர்.

- Advertisement -

பும்ரா இல்லாமலேயே:

ஆனால் சாம்பியன்ஸ் கோப்பையில் அசத்திய அவர்கள் தங்களை சாம்பியன் வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் மட்டுமல்லாமல் ஜஸ்ப்ரித் பும்ராவும் இல்லாமல் இந்தியாவால் எந்தக் கோப்பையையும் வெல்ல முடியும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு இந்திய கிரிக்கெட்டில் திறமையான இளம் வீரர்கள் நிறைந்திருப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது ஆஸ்திரேலியாவில் சந்தித்த தோல்விக்கு பின் கிடைத்த இனிப்பான வெற்றியாகும். அத்தொடரில் இந்தியா முதல் போட்டியில் வென்றும் அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த விதம் நம்முடைய திறமையின் பலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் ஜஸ்ப்ரித் பும்ராவை சார்ந்திருந்ததைப் போல தனிநபரை சார்ந்திருக்கும் அணி நம்மிடம் மிகவும் அரிதாகவே இருந்தது”

- Advertisement -

யாரையும் நம்பியில்ல:

“கடைசிப் போட்டியில் பும்ரா இல்லாததால் ஆஸ்திரேலியா தொடரை வென்றது. ஆனால் அடுத்ததாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கம்பேக் கொடுத்து கச்சிதமாக வென்றது இந்தியா எந்தளவுக்கு திறமையைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியது. அந்தத் தொடர்களிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பும்ரா இல்லாமல் இந்தியா வென்றது”

இதையும் படிங்க: பாவங்க பாகிஸ்தான் 85 மில்லியன் நஷ்டம்.. 6 மில்லியன் லாபம்.. வெறும் 1 போட்டிக்கு 869 கோடி செலவான பரிதாபம்

“அது இந்த விளையாட்டில் யாரும் இன்றியமையாதவர்கள் கிடையாது என்பதை வலியுறுத்துகிறது. கடந்த காலங்களிலும் ரோஹித், விராட் இல்லாமல் இந்தியா கோப்பைகளை வென்றுள்ளது. அதே சமயம் அவர்கள் இருப்பது அணியை பலமாக்குகிறது என்பதில் சந்தேகமில்லை. தற்போது துபாய் மட்டுமின்றி எங்கு விளையாடினாலும் இந்தியா வென்றிருக்கும் என்று நிறைய வெளிநாட்டு வீரர்கள் சொலவதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார். இதிலிருந்து இந்திய அணி யாரையும் நம்பியில்லை, எந்த வீரரும் அணியை விட பெரியவர் கிடையாது என்று கவாஸ்கர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement