இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான மாபெரும் இறுதிப்போட்டி நாளை மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
நான் விளையாடியதிலேயே அவர் தான் கடினமான பவுலர் : வில்லியம்சன்
ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியானது இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்ற காத்திருக்கிறது. அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்தி தாங்களும் ஐசிசி கோப்பையை வெல்வோம் என்கிற முனைப்புடன் நியூசிலாந்து அணியும் தயாராகி வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடரில் நியூஸிலாந்து அணி வெற்றிகரமாக பயணித்து வருவதற்கு அந்த அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சனும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
ஏனெனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் அடித்த அவர் இந்திய அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் 81 ரன்கள் குவித்திருந்தார். இப்படி இந்த தொடரின் கடைசி கட்ட நேரத்தில் சிறப்பான ஃபார்மிற்கு திரும்பியுள்ள அவர் இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடைபெற்ற உரையாடல்கள் சில ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் அவர் கலந்து கொண்ட அந்த பிரத்தேக பேட்டியில் இதுவரை தான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர் யார்? என்ற கேள்விக்கு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தான் என்று கூறியுள்ளார். அதேபோன்று தான் பார்த்த மிகச்சிறந்தான பேட்ஸ்மேன்கள் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில் :
இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளை தவறவிட இருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா.. காரணம் என்ன? – வெளியான தகவல்
சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகியோரது பெயரை சுட்டிக்காட்டி உள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த அவர் அந்த அணியை வெகு சிறப்பாக வழி நடத்தி வந்தாலும் அவரால் கோப்பையை கைப்பற்ற முடியாத காரணத்தினால் தற்போது சான்ட்னரின் தலைமையின் கீழ் முழுநேர பேட்ஸ்மேனாக அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



