மாஸ்டர்ஸ் லீக்: 85க்கு அவுட்.. ராகுல் ஹாட்ரிக்.. சச்சினை அவுட்டாக்கி மன்னிப்பு கேட்ட பவுலர்.. தெ.ஆவை சாய்த்த இந்தியா

IND vs RSA
- Advertisement -

இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் மாஸ்டர்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அதில் மார்ச் ஒன்றாம் தேதி வதோதராவில் ஏழாவது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஜேக் கேலிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஹென்றி டேவிட்ஸ் நிதானமாக விளையாடினார். ஆனால் மறுபுறம் நிதானம் காட்டிய ஹாசிம் அமலாவை நான்காவது ஓவரின் முதல் பந்தில் 9 ரன்னில் அவுட்டாக்கிய ராகுல் ஷர்மா அடுத்து வந்த ஜாம்பவான் கேலிசை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

ராகுல் சர்மா ஹாட்ரிக்:

அதோடு நிற்காத அவர் அதற்கடுத்ததாக வந்த ருடோல்ஃபை கோல்டன் டக் அவுட்டாக்கி 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து மாயாஜாலம் செய்தார். அதனால் 35-3 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு மறுபுறம் நிதானமாக விளையாடிய ஹென்றி 38 ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து அதிரடி காட்ட முயற்சித்த டேன் விலாஸ் 21 ரன்களில் யுவ்ராஜ் சிங் சுழலில் சிக்கினார்.

இறுதியில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். அதனால் 13.5 ஓவரிலேயே தென்னாப்பிரிக்காவை வெறும் 85 ரன்களுக்கு இந்தியா மாஸ்டர்ஸ் சுருட்டி வீசியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு ராகுல் ஷர்மா 3, யுவராஜ் சிங் 3, பவன் நெஹி 2, ஸ்டுவர்ட் பின்னி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அடுத்ததாக களம் இறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 6 ரன்களில் சபலாலாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதற்காக அந்த ஓவர் முடிந்ததுமே மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களிடம் சபலாலா மன்னிப்பு கேட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து வந்த இர்ஃபான் பதான் 13 ரன்னில் எடி லெலேவிடம் அவுட்டானார்.

இதையும் படிங்க: டபுள் 3 – 0.. இந்தியாவை ஏளனமாக பேசிய டக்கெட்.. இங்கிலாந்து மோசமான உலக சாதனை.. செமி ஃபைனலில் தெ.ஆ

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய அம்பாதி ராயுடு 41* (34) ரன்களும் பவன் நெகி அதிரடியாக 21* (12) ரன்களும் எடுத்தனர். அதனால் 11 ஓவரிலேயே 89-2 ரன்கள் எடுத்த இந்தியா மாஸ்டர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 3 போட்டிகளில் மூன்றாவது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா மாஸ்டர்ஸ் இத்தொடரின் செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

Advertisement