இந்தியா மட்டும் பாகிஸ்தான் போயிருந்தா இதுதான் நடந்திருக்கும் – ராஃபின் உத்தப்பா பேட்டி

Uthappa
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது இம்முறை பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியை தவிர மற்ற அணிகள் பாகிஸ்தான் நாட்டில் விளையாட ஒப்புக்கொண்ட வேளையில் இந்திய அணி மட்டும் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக துபாய் மைதானத்தில் மட்டுமே அனைத்து போட்டிகளையும் விளையாடி வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் போயிருந்தா இதான் நடந்திருக்கும் : ராபின் உத்தப்பா

இதன் காரணமாக இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுத்து வருவதாகவும் இதனால் இந்திய அணி எளிதாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் இப்படி இந்திய அணி துபாயில் மட்டுமே விளையாடுவது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறுகையில் : இந்திய அணி துபாயில் மட்டுமே விளையாடுவது சாதகமாக இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்தியா மட்டும் பாகிஸ்தான் போன்ற தட்டையான ஆடுகளங்களில் சென்று விளையாடி இருந்தால் அங்கு பல சாதனைகளை இந்திய அணியால் நிகழ்த்தியிருக்க முடியும்.

மேலும் இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்கும் வாய்ப்பினையும் அதிகமாக பெற்றிருப்பார்கள். நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் இந்திய அணி குறித்து புகார் சொல்லலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அவர்கள் தான் அந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள்.

- Advertisement -

இந்திய அணிக்கு ஒரே இடத்தில் விளையாடுவதால் முழுவதுமாக நன்மை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரே இடத்தில் விளையாடுவது சற்று அதிக பரீட்சயத்தை ஏற்படுத்தும் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தும் – மைக்கல் கிளார்க் கருத்து

அதன் பின்னர் அரையிறுதியில் விளையாடும் இந்திய அணி நிச்சயம் அந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement