இந்தியாவின் சாதகத்தை புரிஞ்சுக்க ராக்கெட் சைன்ஸ் தேவையில்லை.. துபாயில் பிரச்சனையும் இருக்கு.. டுஷன் பேட்டி

Van Der Dussen
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மட்டும் துபாயில் விளையாடுகிறது. எல்லைப் பிரச்சினை காரணமாக 2008 முதலே பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ள இந்தியா இம்முறையும் அங்கு சென்று விளையாட மாட்டோம் என்று அறிவித்தது. அதனால் இந்தியா தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது.

அப்போது எந்த விமர்சனமும் வரவில்லை. ஆனால் தற்போது துபாயில் விளையாடிய 2 போட்டிகளிலும் வங்கதேசம் மற்றும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அதனால் தற்போது ஒரே ஹோட்டலில் தங்கி, துபாய் பிட்ச் பற்றி தெரிந்து, ஒரே மைதானத்தில் விளையாடும் இந்தியாவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

ராக்கெட் அறிவியல் இல்ல:

குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகியோர் இந்தியாவுக்கு அதிக சாதகம் இருப்பதாக சமீபத்தில் விமர்சித்தார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள தென்னாப்பிரிக்க வீரர் ராசி வேன் டெர் டுஷன் துபாயில் விளையாடுவது கண்டிப்பாக இந்தியாவுக்கு பெரிய சாதகம் என்று கூறியுள்ளார். ஆனால் அதுவே இந்தியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இது பற்றி டுஷன் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக அது சாதகம். பாகிஸ்தான் அதைப்பற்றி பேசியதை நான் பார்த்தேன். ஆனால் கண்டிப்பாக அது இந்தியாவுக்கு சாதகமே. நீங்கள் ஒரு இடத்தில் ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே மாதிரியான வசதிகளில் பயிற்சிகளை எடுத்து, ஒரே மைதானத்தில், ஒவ்வொரு முறையும் ஒரே பிட்ச்சில் விளையாடினால் கண்டிப்பாக அது சாதகம்”

- Advertisement -

இந்தியாவுக்கு சாதகம்:

“அதைப் புரிந்துக் கொள்ள நீங்கள் ராக்கெட் அறிவியல் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த சாதகத்தைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கும். அதே சமயம் ஒரு வகையில் அது அவர்களுக்கு அழுத்தத்தையும் கொடுக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு எதிராக செமி ஃபைனல் அல்லது ஃபைனலில் விளையாட எதிரணி துபாய்க்கு செல்வார்கள்”

இதையும் படிங்க: சச்சினையும் கோலியையும் கம்பேர் பண்ண மாட்டேன்.. கிரேக் சேப்பலும் அவரும் ஒன்னா? கவாஸ்கர் கருத்து

“அந்த அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் போது அவர்களுக்கு சூழ்நிலைகள் வித்தியாசமாகவே இருக்கும். இருப்பினும் இந்தியா அதற்குப் பழகி இருப்பார்கள். அதனால் அங்கே சிறப்பாக விளையாட வேண்டும் என்று அழுத்தம் அவர்கள் மீது இருக்கும். ஏனெனில் அவர்கள் அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்தப் போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது.

Advertisement