சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜாத்ரான் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

Zadran
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியானது இன்று லாகூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், அஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ஆப்கானிஸ்தான் வீரர் நிகழ்த்திய உலகசாதனை :

அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க இப்ராஹீம் ஜாத்ரான் 177 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 41 ரன்களையும் குவித்தனர். அது தவிர்த்து முகமது நபி மற்றும் ஷாகிதி ஆகியோர் 40 ரன்கள் குவித்தனர். பின்னர் 326 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரரான இப்ராஹிம் ஜாத்ரான் சர்வதேச ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் புதிய உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் 146 பந்துகளை சிந்தித்த அவர் 12 பவுன்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 177 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்த பென் டக்கெட்டின் சாதனையை அவர் முறையடித்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்னர் லாஹூர் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பென் டக்கெட் 165 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க : 177 ரன்ஸ்.. 9 ஓவரில் 108.. இங்கிலாந்தை புரட்டிய ஆப்கன்.. இப்ராஹிம் தனித்துவ சாதனையுடன் உலக சாதனை

அதனை இந்த போட்டியில் முறியடித்த இப்ராகிம் ஜாத்ரான் அதே மைதானத்தில் 177 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி பாகிஸ்தான் மண்ணில் அதிக ரன்கள் அடித்த நான்காவது வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement