இந்தவொரு சாதகம் போதும்.. கண்டிப்பா சாம்பியன்ஸ் டிராபி கப் இந்திய அணிக்கு தான் – நாசர் ஹுசேன் கருத்து

Nasser
- Advertisement -

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தான் மண்ணில் துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது லீக் சுற்று போட்டிகளை முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து லீக் சுற்று போட்டிகளில் தற்போது விளையாடி வருகின்றன. அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்திய அணியே சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் :

அதேவேளையில் குரூப் பி பிரிவில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெரும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அதன் பின்னர் மார்ச் 9-ஆம் தேதி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மாபெரும் இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய அணிக்கு சாதகமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசேன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்திய அணி வேறு எங்கும் பயணிக்காமல் துபாய் மைதானத்திலேயே ஆடுவதால் அவர்களுக்கு கூடுதல் சாதகம் இருக்கும். ஏனெனில் இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் துபாய்க்கும் பாகிஸ்தானில் உள்ள மூன்று நகரங்களுக்கும் இடையே பயணம் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு ஒரே ஹோட்டல், ஒரே ஓய்வறை, ஒரே மைதானம் என்பதனால் அவர்கள் எளிதாக மைதானத்தை புரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி மற்ற அணிகள் மைதானங்களுக்கு ஏற்ப அணிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வேளையில் இந்திய அணி ஒரே மைதானத்திற்கு ஏற்றார் போல் தரமான வீரர்களை அணிக்குள் இணைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியால் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை எளிதாக கைப்பற்ற முடியும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இதுவே கோலின்னா கிங்குன்னு சொல்வீங்க.. கையில் மிராக்கிள் வெச்சுருக்கும் குலதீப்பை பாராட்டுங்க.. அஸ்வின் பேட்டி

மற்ற அணிகளுக்கு இருக்கும் பாதகம் இந்திய அணிக்கு இல்லாததால் இம்முறை இந்திய அணியே சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் வகையில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என நாசர் ஹுசேன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement