உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் தற்போது நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியானது தாங்கள் சந்தித்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராகவும் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்ததால் அந்த அணி இந்த தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்து லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது.
பாகிஸ்தான் அணியால் எதுவுமே செய்ய முடியாது : கவாஸ்கர்
இன்னும் எஞ்சியுள்ள ஒரு லீக் ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றாலும் இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்பதனால் பாகிஸ்தான் அணியின் இந்த செயல்பாடு அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலருமே பாகிஸ்தான் அணியின் இந்து செயல்பாட்டை விமர்சித்து பல்வேறு வகையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் அணியில் தற்போதைக்கு போதிய திறமையான வீரர்கள் இல்லை என்றும் இந்த பாகிஸ்தான் அணியால் இந்திய பி அணியை கூட வீழ்த்த முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய கவாஸ்கர் கூறியதாவது :
தற்போதுள்ள பாகிஸ்தான் அணியால் இந்திய பி அணியை கூட வீழ்த்த முடியாது. ஏனெனில் பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்கள் தற்போது அறவே இல்லை. இந்திய பி அணி இப்போது பாகிஸ்தான் அணியை கூட எதிர்கொண்டால் எளிதாக அவர்களை வீழ்த்தி விடமுடியும். அதேபோன்று இந்திய சி அணியை பாகிஸ்தான் வீழ்த்துமா? என்று கேட்டால் கூட என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
அந்த அளவிற்கு பாகிஸ்தான் அணி தற்போது மோசமான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணியில் வழக்கமாகவே திறமையான வீரர்கள் பலர் இருப்பார்கள். டெக்னிக்கலாக அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் இயற்கையாகவே அவர்களுக்கு நல்ல திறன் இருக்கும். ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் எந்த ஒரு வீரருக்கும் அப்படி ஒரு திறன் இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும்.
இதையும் படிங்க : ஒன்டேவில் கோலி மாதிரி பிளேயரை பாத்ததில்லை.. என்னை மாதிரி சச்சினையும் முந்த வாய்ப்பிருக்கு.. பாண்டிங் பாராட்டு
இப்பொழுதுள்ள பாகிஸ்தான் அணி நிச்சயம் இதே ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றால் இன்னும் மோசமான நிலையை சந்திக்கும் என்றும் பாகிஸ்தான் அணியை யாராலும் வீழ்த்த முடியும் என்கிற நிலை ஏற்படும் என்று சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.



