சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மூலம் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்பானது இதுவரை 8 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிக முக்கியமான பெரிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5-வது லீக் போட்டியானது துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி :
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 244 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 111 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை அவர் நிகழ்த்தியிருந்த வேளையில் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.
அந்த வகையில் இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14000 ரன்களை எடுத்திருந்த இரண்டு வீரர்களாக சச்சின் மற்றும் சங்ககாரா ஆகியோர் இருந்த வேளையில் அவர்களுக்கு அடுத்து 14,000 ரன்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்தினார். அதிலும் குறிப்பாக 14,000 ஒருநாள் ரன்களை அதிவேகமாக அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தற்போது நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : நாட்டுக்காக கோலி இதை செஞ்சது சாதாரணம்.. பாகிஸ்தானை வீழ்த்த அவங்க உதவியதை மறக்காதீங்க.. ரோஹித் பேட்டி
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது 350-வது இன்னிங்ஸ்கிலும் சங்கக்காரா தனது 378-ஆவது இன்னிங்ஸ்சிலும் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்த வேளையில் விராட் கோலி 300-க்கு குறைவான இன்னிங்சிலேயே அதாவது 287 வது இன்னிங்ஸ்லேயே அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



