இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத் நகரில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 357 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்தை அபாரமாக பவுலிங் செய்த இந்தியா 34.2 ஓவரில் 214க்கு சுருட்டி வெற்றி பெற்றது. ஏற்கனவே இத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை ஒயிட்வாஸ் செய்து வென்ற இந்தியா சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதை காண்பித்துள்ளது.
சாம்பியன் இந்தியா:
மறுபுறம் 3 – 0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலையில்லை என்று சொன்ன இங்கிலாந்து கடைசியில் அதே போலவே பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் 3 – 0 என்ற கணக்கில் வென்றாலும் சில விஷயங்களில் முன்னேறி சாம்பியன் அணியாக இருப்பதையே விரும்புவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களுக்கு சவால்கள் இருக்கும் என்பது தெரியும். எங்கள் மீது எறியப்படும் எந்த சவாலையும் சமாளிப்பதற்காகவே நாங்கள் களத்திற்கு வெளியே வருகிறோம். என்னுடைய விக்கெட்டை எடுத்த (மார்க் வுட்) பவுலருக்கு வாழ்த்துக்கள். சில நேரங்களில் நீங்கள் முதல் பந்தை தவறவிட்டாலும் இரண்டாவது பந்தில் விக்கெட்டை இழப்பீர்கள்”
முன்னேற்றம் முக்கியம்:
“இந்தத் தொடரில் நாங்கள் எதுவும் தவறாக செய்ததாக தெரியவில்லை. சில விஷயங்களில் முன்னேறுவதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அதைப்பற்றி நான் இங்கே நின்று விவாதிக்கப் போவதில்லை. எங்களுடைய வீரர்கள் எங்களது விவாதங்களில் கச்சிதமாக இருக்கிறார்கள். எனவே எங்களுடைய அணிக்குள் தொடர்ச்சியாகத் தகவல் தொடர்பை தெளிவாக வைத்திருப்பதே எங்கள் வேலை”
இதையும் படிங்க: 142 ரன்ஸ் 3 – 0.. இங்கிலாந்து கேட்ட ஒய்ட்வாஷ் தோல்வியை பரிசளித்த இந்தியா.. 2014க்குப்பின் சாதனை வெற்றி
“திறன் பற்றி எதுவும் விவாதிப்பதற்கு இல்லை. கண்டிப்பாக சாம்பியன் அணியாக இருக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற விரும்புவார்கள். நாங்கள் அடித்த ஸ்கோரில் மகிழ்ச்சி. எங்கள் அணியில் விளையாடும் விதத்தில் கொஞ்சம் சுதந்திரம் இருக்கிறது. கடந்த உலகக்கோப்பை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதை நாங்கள் தொடர விரும்புகிறோம். அதைப் பின்பற்றும் போது சில நேரங்களில் வெற்றி நம் பக்கம் விழாது. ஆனால் அது பரவாயில்லை” என்று கூறினார்.



