இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது அரை சதமடித்து 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இந்தியா அபாரம்:
அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை அடித்து 112 (102) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஸ்ரயாஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியான அரை சதத்தை அடித்து 78 (64) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் கேஎல் ராகுல் 40, பாண்டியா 17, அக்சர் பட்டேல் 13, சுந்தர் 14, ராணா 13 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 356 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 357 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் பில் சால்ட் 23, பென் டக்கெட் 34 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்ததாக வந்த டாம் பாண்டன் 38, ஜோ ரூட் 24 ரன்களில் குல்தீப், அக்சர் படேல் சுழலில் அவுட்டானார்கள். மிடில் ஆர்டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரி ப்ரூக் 19, கேப்டன் பட்லர் 6, லிவிங்ஸ்டன் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள்.
ஒய்ட்வாஷ் போதுமா:
இறுதியில் கஸ் அட்கின்ஷன் 38 ரன்கள் எடுத்தும் 34.2 ஓவரில் இங்கிலாந்தை 214க்கு ஆல் அவுட் செய்த இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, அக்சர் படேல், ஹர்டிக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தனர். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் வலுவான இங்கிலாந்தை ஒயிட்வாஸ் செய்த இந்தியா தங்களை சொந்த காண்பித்துள்ளது.
இதையும் படிங்க: முகமது சிராஜுக்கு நடந்தது அநியாயம்.. ஹர்ஷித் ராணா அப்படி என்ன பண்ணிட்டாரு – கொந்தளிக்கும் ரசிகர்கள்
மேலும் 3 – 0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலையில்லை என்று கூறிய பென் டக்கெட் இடம் வகிக்கும் இங்கிலாந்துக்கு சொன்னது போலவே ஒய்ட்வாஸ் தோல்வியை பார்சல் கட்டியுள்ள இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் காண்பித்துள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு எதிராக ரன்கள் வித்தியாசத்தில் தங்களது 2வது பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 2014 ஃகார்டிப் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய 2வது பெரிய வெற்றியாகும்.



