முதல் இந்திய வீரராக சுப்மன் கில் நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ

Shubman-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது இம்முறை தாங்கள் முதலாவதாக பந்துவீசுவதாக அறிவித்தது.

சுப்மன் கில் நிகழ்த்திய வரலாற்று சாதனை :

அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடி வரும் இந்திய அணியானது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி மிகப்பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய துணை கேப்டன் சுப்மன் கில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இன்றைய போட்டியில் 102 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 112 ரன்கள் குவித்து ஆடில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எப்போதுமே அகமதாபாத் மைதானம் என்றாலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்த மைதானத்தில் சதம் அடித்துள்ளார். அதாவது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என மூன்று வடிவ சர்வதேச போட்டிகளிலும் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரராக இவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என இரண்டு வடிவத்திலும் சதம் அடித்திருந்த அவர் இன்று அடித்த ஒருநாள் போட்டியின் சதத்தின் மூலம் இந்த சாதனையை பூர்த்தி செய்துள்ளார்.

இதையும் படிங்க : 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து வீரர்கள் பச்சைப் பட்டை அணிய காரணம் என்ன? விவரம் இதோ

இவருக்கு முன்னதாக இதுபோன்ற சாதனையை டூப்ளிசிஸ், டேவிட் வார்னர், பாபர் அசாம், குவிண்டன் டி காக் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் உலகளவில் ஒட்டுமொத்தமாக ஐந்தாவது வீரராகவும், இந்திய அளவில் முதல் வீரராகவும் அவர் எந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement