3வது ஒருநாள் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து வீரர்கள் பச்சைப் பட்டை அணிய காரணம் என்ன? விவரம் இதோ

Green Band
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் முதல் மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு அஹமதாபாத் நகரில் துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியது. அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்திய அணி நிரூபித்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அந்த நிலையில் துவங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பச்சைப் பட்டையை தங்களுடைய கையில் அணிந்திருந்தார்கள். பொதுவாக ஏதேனும் முன்னாள் வீரர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இயற்கை எய்தினால் வீரர்கள் கருப்புப் பட்டை அணிவது வழக்கமாகும்.

- Advertisement -

பிசிசிஐ முயற்சி:

ஆனால் இந்தப் போட்டியில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வித்தியாசமாக பச்சைப் பட்டையை அணிந்தது பல ரசிகர்களுக்கு புரியாத ஒன்றாக அமைந்தது. அதற்கான காரணம் என்னவெனில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அணியப்பட்டதாகும். அதாவது பிசிசிஐ “உறுப்புகளைத் தானம் செய்யுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்ற முயற்சியை எடுத்துள்ளது.

ஆபத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உறுப்புகளை தானம் செய்யும் நோக்கத்தில் பிசிசிஐ இந்த முயற்சியை இந்திய அணியுடன் சேர்ந்து எடுத்துள்ளது. இதை ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமை தாங்குகிறார். ஒரு மனிதர் உறுப்புகளை தானம் செய்வதன் வாயிலாக ஆபத்தில் இருக்கும் தேவையான 8 மனிதர்களின் உயிர்களைக் காக்க முடியும்.

- Advertisement -

பச்சைப் பட்டை விழிப்புணர்வு:

எனவே இந்தப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து வீரர்கள் அதுப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தங்களுடைய கையில் பச்சைப் பட்டையை அணிந்து விளையாடுகிறார்கள். இது பற்றிய பிரசாரத்தை போட்டி துவங்குவதற்கு முன் கேப்டன்கள் ரோஹித் சர்மா – ஜோஸ் பட்லர் ஆகியோர் கையெழுத்திட்டு துவங்கி வைத்தனர். அப்போது உமங் டானி, தீப்தி விமல் ஆகிய 2 பயனாளர்கள் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: டாஸில் 10க்கு 10 தோல்வியால் இந்தியா பரிதாப சாதனை.. 3வது ஒன்டேவில் 3 மாற்றங்கள் செய்த ரோஹித் சர்மா

பிசிசிஐ மற்றும் இந்திய அணி எடுத்துள்ள இந்த முயற்சிக்கு முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த முயற்சியை நேரலையில் பாராட்டினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் வெற்றியைப் பெறும் முனைப்புடன் 2 அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement