எந்தவொரு இந்திய வீரரும் செய்யாத வராலாற்று சாதனையை இன்று நிகழ்த்திய ஹர்ஷித் ராணா – விவரம் இதோ

Harshit
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று நாக்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கி இருந்தனர். அவர்கள் இருவருமே ஏற்கனவே இந்திய டி20 மற்றும் பெஸ்ட் அணியில் விளையாடியிருந்த வேளையில் இன்று அவர்களுக்கு ஒருநாள் போட்டிகளுக்கான அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஹர்ஷித் ராணா நிகழ்த்திய அசத்தல் சாதனை :

இந்நிலையில் இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா தான் அறிமுகமான இந்த போட்டியிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு இந்திய வீரரும் நிகழ்த்தாத மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்து 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக ஹர்ஷித் ராணா 7 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் மூவருடன் 53 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் அவர் நிகழ்த்திய பிரமாண்ட சாதனை யாதெனில் : ஏற்கனவே இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது அறிமுகமான அவர் முதல் இன்னிங்சிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அறிமுகமான போட்டியில் விளையாடிய அவர் முதல் போட்டியிலேயே 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய அவர் 53 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்று வகையான வடிவத்திலும் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் 6 ஆவது வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

என்ன தான் அவர் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுக்கும் பவுலராக இருந்தாலும் விக்கெட் டேக்கிங் பவுலராக இருப்பதால் தொடர்ந்து அவர் இந்திய அணியில் நீடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் அவருக்கு சோதனையாக இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement