இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 47.4 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை குவித்தது.
ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய அசத்தல் சாதனை :
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 52 ரன்களையும், ஜேக்கப் பெத்தல் 51 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இன்றையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் ஆறாவது வீரராக மாபெரும் சாதனையுடன் நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் இந்த போட்டியின் போது 9 ஓவர்களை வீசிய அவர் ஒரு மெய்டனுடன் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600-க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த ஆறாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மற்றும் ஷான் போலக், டேனியல் வெட்டோரி, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில் இந்த சாதனை பட்டியலில் ஆறாவது வீரராக ஜடேஜா இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : அப்பா மாதிரி கண்டித்ததால் சேவாக் அழுதாரு.. சச்சின் தான் ரைட்டை மன்னிப்பு கேட்க விடல.. ராஜிவ் சுக்லா
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இடதுகை சுழற்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற அசாத்திய சாதனையையும் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



