முதல் ஒன்டேவில் விராட் கோலி விலகல்.. ஜெய்ஸ்வால் உட்பட 2 அறிமுகம்.. காரணத்தை பகிர்ந்த ரோஹித் சர்மா

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இந்தியா விளையாடுகிறது. அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது.

மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்யவே விரும்புவதாக தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்குவதாக ரோஹித் அறிவித்தார்.

- Advertisement -

கோலி விலகல்:

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கடந்த 2023இல் அறிமுகமானது முதல் அசத்தி வரும் ஜெய்ஸ்வால் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடினார். அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன் அவருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கி சோதித்துப் பார்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் விலகிய நிலையில் சிராஜ் இல்லாததால் ஹர்ஷித் ராணா அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி போட்டியில் விளையாட மாட்டார் என்று ரோஹித் சர்மா அறிவித்தார். குறிப்பாக நேற்று பயிற்சி எடுக்கும் போது விராட் கோலி முழங்காலில் காயத்தை சந்தித்ததால் விளையாடவில்லை என்று ரோகித் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பவுலிங் செய்ய விரும்புகிறோம். ஆனால் அது முக்கியமான விஷயம் அல்ல. ஆரம்பத்தில் நாங்கள் பந்து வீச்சில் ஆக்ரோஷமாகவும் பின்னர் நன்றாகவும் செயல்படுவது முக்கியம். கொஞ்சம் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் இந்தத் தொடரை துவக்குவது நல்லது. முக்கியத் தொடருக்கு முன்பாக கொஞ்சம் போட்டி நேரம் கிடைப்பது முக்கியமான விஷயம்”

இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் – என்ன ஆனது?

“எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜெய்ஸ்வால், ராணா அறிமுகமாக களமிறங்குகிறார்கள். துரதிஷ்டவசமாக நேற்று இரவு முழங்காலில் காயத்தை சந்தித்ததால் விராட் விளையாடவில்லை” என்று கூறினார். இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி

Advertisement