எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே கடந்த ஜனவரி 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அந்த அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது துவங்க இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள வேளையில் அவர் திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்துவிள்ளார்.
ஓய்வை அறிவித்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் :
அதுமட்டுமின்றி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் வெளியேறி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 71 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 6 அரைசதம் என 1495 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 35 வயதை எட்டியுள்ள மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் திடீரென ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக மிட்சல் மார்ஷ், கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் விலகியிருந்த வேளையில் தற்போது மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்சும் விலகியுள்ளது அந்த அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஏன் ஓய்வு பெறுகிறேன் என்பது குறித்து பேசியா ஸ்டாய்னிஸ் கூறியதாவது :
ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடியது என்பது மறக்க முடியாத ஒரு பயணமாகும். ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடிய ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்துள்ளேன். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் நான் அனைவருக்கும் நன்றியுள்ளனாக இருக்க நினைக்கிறேன். என்னுடைய நாட்டுக்காக இவ்வளவு நாள் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி.
இதையும் படிங்க : நான் பெரிய பெரிய சிக்ஸர்களை எளிதாக அடிக்க காரணமே அவர்தான் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கருத்து
இந்த முடிவு எளிதானது கிடையாது என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் தற்போதைய சூழலில் நான் என்னுடைய அடுத்த கட்ட கிரிக்கெட் வாழ்க்கையை நோக்கி நகர வேண்டிய முக்கிய அத்தியாயத்தில் இருக்கிறேன். எனவே அதற்கு கவனம் செலுத்தும் வகையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஸ்டாய்னிஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



