குரு யுவ்ராஜ் சொன்னதை செஞ்சுட்டேன்.. இங்கிலாந்தை நொறுக்கிய திட்டம் பற்றி ஆட்டநாயகன் அபிஷேக்

Abhishek Sharma 2
- Advertisement -

மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 248 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா சதத்தை அடித்து 135 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை மிரட்டலாக பந்து வீசிய இந்தியா 10.3 ஓவரில் 97க்கு சுருட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 55 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தத் தொடரை வென்றது.

- Advertisement -

ஆட்டநாயகன் அபிஷேக்:

இந்த வெற்றிக்கு சதத்தை அடித்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்ற தம்முடைய குரு யுவராஜ் சிங் ஆசையை இன்று நிறைவேற்றியுள்ளதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தை அதிரடியாக எதிர்கொண்ட திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நாட்டுக்காக சதம் அடித்தது எப்போதும் சிறப்பான உணர்வு. இது ஸ்பெஷலானது. இதற்கு முன்பும் நான் தெரிவித்துள்ளேன். என்னுடைய நாள் என்று தெரியும் போது அதில் முதல் பந்திலிருந்தே நான் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். இப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்று தான் முதல் நாளிலிருந்து பயிற்சியாளர் மற்றும் கேப்டன் எனக்கு ஆதரவு தருகிறார்கள்”

- Advertisement -

யுவ்ராஜ் ஆசை:

“அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயம். 140 – 150 கிலோமீட்டர் வேகத்தில் எதிரணி பவுலிங் செய்யும் போது நீங்கள் எதற்கும் பின்வாங்காமல் தயாராக இருக்க வேண்டும். நான் பந்தை பார்த்து அதற்கு தகுந்தார் போல் என்னுடைய ஷாட்டுகளை அடிக்க விரும்பினேன். ஆர்ச்சர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரை கவர்ஸ் திசைக்கு மேலே சிக்ஸர் அடிப்பது மிகவும் ஸ்பெஷலான ஒன்று”

இதையும் படிங்க: 97க்கு ஆல் அவுட்.. 150 ரன்ஸ்.. இங்கிலாந்தை தூளாக்கிய இந்தியா.. 2012ஐ முந்தி மாபெரும் சாதனை வெற்றி

“ரசித்துக்கு எதிராக அடிக்க சிக்ஸர்களும் ஸ்பெஷலானது. நேராக அடித்ததையும் மறக்கவில்லை. அது நேற்று யுவ்ராஜ் பாஜி குறிப்பிட்ட ஒரு ஷாட். இதற்குப் பின் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் எப்போதும் நான் 15 – 20 ஓவர்கள் வரை விளையாடுவதை விரும்புகிறார். கௌதம் கம்பீர் பாஜியும் நான் இதை செய்வதையே விரும்பினார். எனவே இது என்னுடைய நாள் என்று நினைத்து அதில் என்னுடைய திட்டங்களை செயல்படுத்தினேன்” எனக் கூறினார்.

Advertisement