13000 ரன்ஸ் 50 சதம்.. அதுல முடிசூடா அரசனான கோலி சாம்பியன்ஸ் ட்ராபியில் கம்பேக் கொடுப்பாரு.. கைப் பேட்டி

Mohammed Kaif
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக துபாய் மண்ணில் முக்கியமான ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சுமாரான ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் இந்தியா வெல்ல வேண்டுமெனில் அவர்கள் இருவரும் நன்றாக விளையாடுவது அவசியமாகிறது.

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் போல நவீன கிரிக்கெட்டில் 26000+ ரன்களை விளாசி 81 சதங்களை அடித்துள்ள விராட் கோலி இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார். இருப்பினும் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அவருடைய சுமாரான ஆட்டத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.

- Advertisement -

கைப் நம்பிக்கை:

இந்நிலையில் விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். எனவே சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் வெளிப்படுத்திய ஆட்டத்தை மறந்து விட்டு விளையாடினால் சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலியால் அசத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி கைஃப் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி எப்போதும் தோல்விகளை ஏற்றுக்கொள்ளாமல் கம்பேக் கொடுப்பார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரை முடிந்து போனவராக எழுத வேண்டாம். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்துள்ள அவர் சுமார் 13000 ரன்கள் குவித்துள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன நடந்தது என்பதை மறந்து விடுங்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் வித்தியாசமாக விளையாடுவார்”

- Advertisement -

முடிசூடா அரசன்:

“கடைசியாக துபாயில் விளையாடிய போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 61 பந்துகளில் 122 ரன்கள் அடித்த அவர் 6 சிக்ஸர்கள் அடித்தார். துபாயில் அவரது ஃபார்ம் நன்றாக இருக்கிறது. எனவே சாம்பியன்ஸ் டிராபியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஓப்பனிங் போட்டியில் ரன்கள் அடித்தால் அதற்கடுத்த போட்டிகளிலும் அவர் தொடர்ந்து ரன்களை அடிப்பார் என்று நான் கேரண்டியாக சொல்வேன்”

இதையும் படிங்க: கஷ்டப்படும் போது தான் உண்மை என்னனு தெரியும்.. கம்பேக் குறித்து எமோஷனலாக பேசிய – முகமது ஷமி

“விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் முடிசூடா அரசன். அவருடைய சகாப்தம் இன்னும் முடியவில்லை. அது தொடரும்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ஃபார்முக்கு திரும்புவதற்காக விராட் கோலி ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளார். அதனால் 13 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் அவர் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement