ஜஸ்ப்ரீத் பும்ராவை என்கூட கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ்.. காரணத்தோடு விளக்கம் கொடுத்த – கபில் தேவ்

Kapil-Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 205 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளையும், 70 டி20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அது தவிர்த்து 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 133 போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஜஸ்ப்ரீத் பும்ராவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் :

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் ஜஸ்ப்ரீத் பும்ரா எந்த ஒரு பலமான அணிக்கு எதிராகவும் தனது சிறப்பான பந்துச்சு மூலம் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை திணற வைத்து வருகிறார். அதோடு கடந்த ஓராண்டாக அவரது பந்துவீச்சு உச்சகட்ட பார்மை எட்டியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அண்மையில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய பும்ரா முதல் இன்னிங்சின் போது அசவுகரியத்தை சந்தித்தார். இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசாத அவருக்கு முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. ஒருவேளை பும்ரா அந்த தொடரில் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு தான் பெரிய இழப்பு. இந்நிலையில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவை என்னுடன் யாரும் ஒப்பிட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தயவுசெய்து பும்ராவை என்னுடன் யாரும் ஒப்பிட வேண்டாம். ஏனெனில் ஒரு தலைமுறையை சேர்ந்த வீரரை மற்றொரு தலைமுறை வீரருடன் ஒப்பிடுவது என்னை பொறுத்தவரை தவறு. ஏனெனில் தற்போதுள்ள வீரர்கள் ஒரு நாளில் 300 ரன்கள் கூட அடிக்கும் அளவிற்கு இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய காலத்தில் அப்படி நடந்துவது கிடையாது.

இதையும் படிங்க : 99.94 சரிஞ்சுருக்கும்.. டான் ப்ராட்மேனையே கிரேட் பும்ரா தெறிக்க விட்டிருப்பாரு.. கில்கிறிஸ்ட் மெகா பாராட்டு

அதேபோன்று அப்போதைய கிரிக்கெட்க்கும் இப்போதைய கிரிக்கெட்க்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனால் யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம் என கபில் தேவ் தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement