99.94 சரிஞ்சுருக்கும்.. டான் ப்ராட்மேனையே கிரேட் பும்ரா தெறிக்க விட்டிருப்பாரு.. கில்கிறிஸ்ட் மெகா பாராட்டு

Adam Gilchrist
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தது. 3 – 1 என்ற கணக்கில் அத்தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் அந்த தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவின் அற்புதமான போராட்டம் வீணானது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் முதல் போட்டியிலேயே கேப்டனாக எட்டு விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் ரன்கள் (295) வித்தியாசத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதற்கடுத்த போட்டிகளிலும் முழுமூச்சுடன் பந்து வீசிய அவர் மொத்தம் 32 விக்கெட்டுகள் எடுத்து ஒரு ஆஸ்திரேலிய தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக வரலாறு படைத்தார்.

- Advertisement -

ப்ராட்மேன் – பும்ரா மோதினால்:

அது போக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலர் என்ற வரலாற்றையும் பும்ரா படைத்துள்ளார். மேலும் கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஜோயல் கார்னர், மால்கோம் மார்சல் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களை முந்திய அவர் 200 விக்கெட்டுகளை 20க்கும் குறைவான சராசரியில் எடுத்த முதல் பவுலராகவும் உலக சாதனை படைத்தார். இந்நிலையில் அப்படிப்பட்ட அவரை எதிர்கொண்டிருந்தால் ஜாம்பவான் டான் ப்ராட்மேனின் 99.94 உலக சாதனை பேட்டிங் சராசரி குறைந்திருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பிராட்மேனையே குறைந்த ரன்களுக்குள் சில பந்துகளில் பும்ரா அவுட்டாக்கும் திறமையை கொண்டிருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவை நான் ரேட்டிங் செய்ய மாட்டேன். உலக விளையாட்டில் அவர் எந்தளவுக்கு திறமையானவர் என்பதை சொல்வதற்கு எந்த நம்பர்களும் இல்லை”

- Advertisement -

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்:

“அதை சொல்ல திரித்துவத்திற்கு அப்பாற்பட்டவனாக நான் இருக்கிறேன். டான் பிராட்மேன் தனது உச்சத்தில் இருந்திருந்தால் கூட அவர் கணிசமான பந்துகளில் கிழித்திருப்பார். அவர்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக எதிர்கொண்டிருந்தால் பிராட்மேன் அவர்களின் 99 பேட்டிங் சராசரி தெற்கே அமர்ந்திருக்கும். பும்ராவை எதிர்கொள்வதில் டொனால்ட் அவர்களுக்கு நான் 35 மதிப்பெண்களை கொடுப்பேன்”

இதையும் படிங்க: இந்தவொரு வாய்ப்பு கிடைத்தால்.. நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயார் – ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி

“உண்மையில் பும்ராவுக்கு நீங்கள் போதுமான அளவுக்கு வெகுமதிகளை கொடுக்க முடியாது” என்று கூறினார். அதே பேட்டியில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “நான் 10க்கு 10 மதிப்பெண்கள் கொடுப்பேன். கில்கிறிஸ்ட் சொன்னது போல பும்ரா இந்த விளையாட்டின் ஆல் டைம் கிரேட்டஸ்ட் பிளேயர்” என்று கூறினார்.

Advertisement