இந்தவொரு வாய்ப்பு கிடைத்தால்.. நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயார் – ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி

Shreyas
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 62 போட்டிகளில் விளையாடி 47 ரன்கள் சராசரியுடன் 5 சதம் மற்றும் 18 அரைசதங்கள் என 2421 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அது தவிர்த்து நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியிலும் ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.

நான் எந்த இடத்திலும் களமிறங்க தயார் :

கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் போது மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடிய அவர் 500 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியிருந்தார். டெஸ்ட் மற்றும் டி20 அணியில் அவர் தொடர்ந்து இடம் பிடிக்க முடியாமல் வந்தாலும் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை நிச்சயம் அவருக்கு இடம் உறுதி என்றே தெரிகிறது.

- Advertisement -

அந்த அளவிற்கு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் தனக்கு இடம் கிடைத்தால் அது எனக்கு பெருமை என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நானும் ராகுலும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆனாலும் இறுதிப்போட்டியை பொறுத்தவரை எங்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது.

- Advertisement -

ஆனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகவும் பெருமைமிகு தருணம். அதுமட்டும் இன்றி இந்த ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் பட்சத்தில் நான் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக உள்ளேன் என்று அதிரடியான அறிவிப்பை ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் இப்போவும் கோலிக்கு வாய்ப்பிருக்கு.. ஆனா ரோஹித்துக்கு பதில் அந்த 2 பேர் ரெடி.. இயன் சேப்பல்

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவரை 26 கோடி 75 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியானது அந்த அணியின் புதிய கேப்டனாகவும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement