தமிழகத்தை சேர்ந்த அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 106 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்து 2009-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 212 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
அஷ்வினுக்கு நிச்சயம் கஷ்டமா இருந்திருக்கும் :
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்த அஸ்வின் கடந்த மாதம் திடீரென ஓய்வினை அறிவித்திருந்தார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வந்த வேளையில் மூன்றாவது போட்டியின் முடிவில் அஸ்வின் திடீரென ஓய்வினை அறிவித்திருந்தார்.
மேலும் ஓய்விற்கு பிறகு தான் இன்னும் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் தான் இருக்கிறேன். எனவே ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அறிவித்திருந்தார், அவரது இந்த ஓய்வு முடிவு பலருக்கும் ஏமாற்றம் அளித்திருந்தாலும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அதேவேளையில் அவரது ஓய்வுக்கான காரணம் குறித்தும் பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் அஸ்வின் ஓய்வினை அறிவிக்க என்ன காரணம்? என்பது குறித்து தான் கூறிய கருத்தில் குறிப்பிட்டதாவது :
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது அஸ்வினை இந்திய அணி புறக்கணித்தது அவருக்கு மனதில் வலியை உண்டாக்கி இருக்கலாம். ஏனெனில் அனுபவ வீரரான அவரை தவிர்த்து இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும். அதனால் அவர் மனதளவில் பெரிய வேதனையை அடைந்திருப்பார்.
இதையும் படிங்க : இனியும் கம்பீரை நம்பக்கூடாது.. எம்.எஸ் தோனிக்கு கிடைக்கவுள்ள புதிய பதவி – விவரம் இதோ
இதற்கு முன்பே ஜடேஜா வெளிநாடுகளில் அவருக்கு பதிலாக அதிகமாக விளையாடி இருந்தாலும் அப்போதெல்லாம் அவர் பாதிக்கப்பட்டதாக நான் உணரவில்லை. ஆனால் தற்போது அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டது நிச்சயம் அவருக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கலாம். இதன் காரணமாகவே அவர் இனி வளரும் வீரர்களுக்கு வழி விட எண்ணி அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கலாம் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.



