ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்த தொடரில் 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் ஜஸ்ப்ரித் பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டு இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார். அதனால் அதிருப்தியடைந்த விராட் கோலி அவருடைய தோளில் இடித்து தள்ளினார்.
அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விராட் கோலிக்கு 20% போட்டி சம்பளத்தை ஐசிசி அபராதமாக விதித்தது. இந்நிலையில் அந்த தேவையற்ற நிகழ்வுக்காக விராட் கோலியை தடை செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹர்மிசன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
தடை பண்ணிருக்கனும்:
“விராட் கோலி செய்ததற்காக தடை செய்திருக்க வேண்டும். அவரை எந்தளவுக்கு நான் விரும்புகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் செய்தது விளையாட்டின் வரைமுறையை தாண்டிய செயலாகும்” என்று கூறினார். அதே போல ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக ஸ்கூப் ஷாட்டுகளை அடித்த சாம் கோன்ஸ்டஸ் கடைசி போட்டியில் உஸ்மான் கவாஜா நேரத்தை தாமதப்படுத்திய போது சில வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தார்.
அதற்கு கவாஜாவின் விக்கெட்டை எடுத்த பும்ராவும் இந்திய அணியினரும் மொத்தமாக சேர்ந்து அவருக்கு முரட்டுத்தனமான பதிலடி கொடுத்தனர். அது மிகவும் சரியான விஷயம் என்று தெரிவிக்கும் ஹார்மிசன் இந்த வருட இறுதியில் நடைபெறும் ஆசஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக சாம் கோன்ஸ்டஸ் இப்படி வாலாட்ட முடியாது என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
ஆஷஸ் சவால்:
இது பற்றி அவர் மேலும் பேசிய பின்வருமாறு. “ஸ்கூப் ஷாட்டுகளை கொண்டிருக்கும் ஷாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பவுலருக்கு எதிராக நேர்த்தியான தடுப்பாட்டத்தை வைத்திருக்கிறாரா? என்பதை அவர் கண்டறிய வேண்டும். ஒருவேளை அந்த தடுப்பாட்டம் இருந்தால் தொடர்ந்து நன்றாக விளையாட முடியும். எனவே அட்டாக் செய்யும் மனதை கொண்ட அவர் அசத்துவதற்கு நல்ல வாய்ப்புள்ளது”
இதையும் படிங்க: இந்த 2 அடிப்படை விஷயத்தை கூட செய்யாத நீங்க என்ன கோச்? கம்பீர் தவறுகளை புட்டு வைத்த ஃகைப்
“ஆனால் அவர் டேவிட் வார்னர் போல இருக்க முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். உண்மையில் அவரால் வார்னரை நெருங்க கூட முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக 19 வயதாகும் அவர் முன்னேறி துவக்க வீரராக களமிறங்கினால் அதை நான் மகிழ்ச்சியாக பார்ப்பேன். இந்தியா ஒரு விஷயம். ஆனால் ஆஷஸ் என்பது வித்தியாசமான அழுத்தத்தையும் சவாலையும் கொண்டு வரும். இந்தியாவுக்கு எதிராக அவர் அதிரடியாக சென்றார். இந்தியா அவருக்கு எதிராக நேரத்தை வீணடித்தார்கள். ஆனால் ஆசஸ் சவாலானதாக இருக்கும்” என்று கூறினார்.



