இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருடைய தலைமையில் இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் வரலாறு காணாத வைட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அது போக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற தொடரில் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் நழுவ விட்டது.
அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு கௌதம் கம்பீர் அணியை சரியாக தேர்ந்தெடுக்காததே காரணம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். மேலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி அவுட்டாவதை தடுக்க முடியாத அளவுக்கு கம்பீரின் பயிற்சி மோசமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சுமாரான கோச்சிங்:
இது பற்றி கைப் பேசியது பின்வருமாறு. “சிறந்த பயிற்சியாளர் எப்போதும் தந்திரங்கள் அடிப்படையில் உயர்ந்தவராக இருப்பார். அவருக்கு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பிளேயிங் லெவன் தேர்ந்தெடுப்பது தெரிந்திருக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த மாதிரியான வீரர்கள் விளையாட வேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பது பயிற்சியாளர் வேலை”
“அதே போல விராட் கோலி போன்ற வீரர்களின் டெக்னிக்கல் தவறை சரி செய்வது பயிற்சியாளரின் எஞ்சிய வேலை. ஏனெனில் விராட் கோலி பலமுறை ஒரே மாதிரி விக்கெட்டை இழந்தார். ஆனால் கம்பீர் அந்த நிலையை இன்னும் எட்டவில்லை. அவருக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்ற நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு 19 வீரர்களுடன் சென்றீர்கள்”
கைப் விமர்சனம்:
“முதல் போட்டியில் ஜடேஜா ஏன் விளையாடவில்லை? என்ற விளக்கத்தை கம்பீர் கொடுத்திருக்க வேண்டும். நம்முடைய லெஜெண்ட் அஸ்வினும் விளையாடவில்லை. முதல் போட்டியில் பும்ரா தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அது போன்ற விஷயங்களுக்கான விளக்கத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் கொடுக்காமல் கோலி – கோன்ஸ்டஸ் மோதியது பற்றி கம்பீர் விளக்கத்தை கொடுத்தார்”
இதையும் படிங்க: பும்ரா அந்த பதவிக்கு தகுதியானவர் தான்.. கவலைப்படாம அவருக்கு அந்த கவுரவத்தை கொடுங்க – சுனில் கவாஸ்கர்
“ஏன் துருவ் ஜுரேலை முதல் போட்டியில் தேர்ந்தெடுத்தீர்கள்? பின்னர் நீக்கினீர்கள்? சுழலுக்கு சாதகமான மைதானத்தில் 150 ரன்கள் அடித்த சர்பராஸ் கான் ஆஸ்திரேலியாவில் ஏன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. கடைசி போட்டியில் அசத்திய பிரசித் கிருஷ்ணாவை விட ஹர்ஷித் ராணாவை முதன் போட்டியிலேயே தேர்ந்தெடுக்க என்ன காரணம்? இது போன்ற பல்வேறு விஷயங்களில் கம்பீர் பின்தங்கியே இருந்தார்” எனக் கூறினார்.



