பி.சி.சி.ஐ மட்டும் அனுமதி கொடுத்தா நாங்களும் பெரிய இடத்துக்கு வந்துடுவோம் – ஏ.பி.டி வில்லியர்ஸ் கோரிக்கை

ABD
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புரை பெற்றுள்ளது. அதோடு இதன் மூலம் மிகப்பெரிய வருவாயும் கிடைத்து வருவதால் பி.சி.சி.ஐ ஆண்டு தோறும் ஐபிஎல் போட்டிகளை நடத்தி வருகிறது. உலக அளவில் அதிக பணம் கொட்டும் தொடராகவும் இந்த ஐபிஎல் தொடரானது பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர்களை விளையாட அனுமதியுங்கள் :

இப்படி இந்தியாவில் ஐபிஎல் தொடர் பிரபலமானதை அடுத்து தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களது நாட்டில் ஐபிஎல் போன்ற லீக் தொடரை துவங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளும் இதுபோன்ற லீக் தொடரை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகமானது எஸ்.ஏ டி20 லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த எஸ்.ஏ டி20 லீக்கில் பங்கேற்றுள்ள பெரும்பாலான அணிகளை இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்களே வாங்கி உள்ளதால் அந்த தொடரானது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஆனாலும் பெரிய அளவில் இந்த தொடரின் மூலம் மற்ற நாடுகளை சேர்ந்த ரசிகர்களை கவர முடியவில்லை. இந்நிலையில் இந்திய வீரர்களை டி20 லீக்கில் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஏ.பி.டி வில்லியர்ஸ் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய வீரர்களை எஸ்.ஏ டி20 லீக்கில் விளையாட எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என்று நம்புகிறேன். அப்படி இந்திய வீரர்கள் இந்த தொடரில் விளையாடினால் எங்களுடைய லீக்கின் மதிப்பும் உயரும். தற்போதைய நிலையில் தினேஷ் கார்த்திக் மட்டுமே இந்த தொடரில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : சர்பராஸ் கான் விடயத்தில் இந்திய அணி மிகப்பெரிய தவறு செய்து விட்டது – சுட்டிக்காட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்

ஆனால் பும்ரா, ரிஷப் பண்ட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இந்த தொடரில் விளையாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்படி நடந்தால் எங்களுடைய டி20 லீக்கின் மதிப்பும் உயரும். எதிர்காலத்தில் அதனை பி.சி.சி.ஐ செய்ய வேண்டும் என்று ஏபிடி வில்லியர்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement