அதை கூட ஏத்துக்கலாம்.. 46க்கு அவுட்டாகியும் என்ன பண்ணீங்க? வெளியே போகலாம்.. கம்பீரை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடிய பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் தோற்றது. சமீபத்தில் நியூசிலாந்திடமும் சொந்த மண்ணில் வைட் வாஸ் தோல்வியை சந்தித்ததால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த அடுத்தடுத்த தோல்விகள் இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மா மட்டுமன்றி கௌதம் கம்பீர் போன்ற பயிற்சியாளர்களையும் 2025 இங்கிலாந்து தொடருக்குள் நீக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ஏனெனில் விராட் கோலி போன்ற முதன்மை பேட்ஸ்மேன் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதை முன்னேற்ற முடியாத அளவுக்கு பயிற்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் கேள்வி:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார்? நியூஸிலாந்துக்கு எதிராக சமீபத்தில் 46க்கு இந்தியா சுருண்டது. அதற்கடுத்த போட்டிகளிலும் நம்மால் நன்றாக பேட்டிங் செய்ய முடியாததால் தோல்வியை சந்தித்தோம். அப்போதிலிருந்தே நம்முடைய பேட்டிங்கில் எந்த முன்னேற்றமும் போராட்ட குணமும் தெரியவில்லை”

“ஆஸ்திரேலியாவிலும் நம்முடைய பேட்டிங் வரிசை திடமாக செயல்படவில்லை. எனவே சகோதரர்களே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன முன்னேற்றத்தை செய்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஒருவேளை இரண்டு தொடர்களிலுமே எதிரணி பவுலிங் தொட முடியாத அளவுக்கு தரமானதாக இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்”

- Advertisement -

சுமாரான கோச்சிங்:

“ஆனால் அது போன்ற பந்து வீச்சை உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேனால் கூட எதிர்கொள்ள முடியவில்லை. அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்?இதே நிகழ்ச்சியில் இந்த வீரர் வருங்காலத்தில் விளையாடுவாரா அவர் விளையாடுவாரா என்பது பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இந்த பயிற்சியாளர் குழுவினர் வருங்காலத்தில் விளையாட வேண்டுமா என்று நான் கேட்கிறேன்”

இதையும் படிங்க: நீங்க விளையாடணுமா? வேண்டாமா? என்கிற முடிவு அவங்ககிட்ட தான் இருக்கு – ரோஹித்தை எச்சரித்த மஞ்சரேக்கர்

“இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரவிருக்கிறது. நான் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி பேசவில்லை. நான் டெஸ்ட் பிளேயர் என்பதால் ஒருநாள் கிரிக்கெட்டை பற்றி அதிகம் பேசமாட்டேன். ஆனால் உங்களிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் கேட்கிறேன்? முன்னேற என்ன செய்கிறீர்கள் பந்தை மட்டும் எரிகிறீர்கள்? அதில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. அவர்களின் டெக்னிக் மற்றும் பொறுமையை நீங்கள் முன்னேற்ற வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. எனவே பயிற்சியாளர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று நான் கேட்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement