இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வென்றது. அதனால் 2014க்குப்பின் 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்தது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெற்று ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.
மறுபுறம் இந்திய அணி அந்த இரண்டு வாய்ப்பையும் தவற விட்டு மோசமான சாதனை படைத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் இந்த தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா தனியாளாக வெற்றிக்கு போராடியது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. குறிப்பாக 5 போட்டிகளில் அவர் மொத்தம் 32 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஆஸ்திரேலிய ரசிகர் கேள்வி:
அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒட்டுமொத்தமாக அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையையும் அவர் முறியடித்தார். அதனால் நிறைய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பும்ராவை மனதார பாராட்டினார்கள்.
இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு தருணத்தில் தன்னுடைய காலணியை கழற்றி மாற்றுகிறார். அப்போது அவரின் விரலில் அணிந்திருந்த சிறிய பாதுகாப்பு உரை கழன்று விழுந்தது. ஆனால் அந்த பெயர் தெரியாத பொருளை வைத்து பும்ரா பந்தை சேதப்படுத்தியதாக ஒரு ஆஸ்திரேலிய ரசிகர் ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் பதிலடி:
அதற்காக ஐசிசி இந்திய அணியை விசாரித்து வருவதாகவும் அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். ஆனால் அதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் அது “விரலை பாதுகாக்கும் பாதுகாப்பு உரை” என்று சிரித்துக் கொண்டே அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தினார்கள்.
இதையும் படிங்க: வெறும் 15 ஆவரேஜ்.. ஓய்வு பெற்ற அப்றமும் ஆடுன சச்சினை விட கோலி பெருசில்ல தூக்குங்க.. பதான் விளாசல்
அதற்காக தடை பெற்ற அவர்கள் மீண்டும் விளையாடினார்கள். ஆனால் உங்களைப் போல் ஜஸ்ப்ரித் பும்ரா பந்தை சேதப்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கும் அளவுக்கு ஏமாற்றுக்காரர் கிடையாது என்று அந்த ஆஸ்திரேலிய ரசிகருக்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இது போக ஆரம்பத்திலேயே பும்ராவின் பவுலிங் ஆக்சன் விதிமுறைக்கு உட்பட்டு இல்லை என்று சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சித்தார்கள். அவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது



