வெறும் 15 ஆவரேஜ்.. ஓய்வு பெற்ற அப்றமும் ஆடுன சச்சினை விட கோலி பெருசில்ல தூக்குங்க.. பதான் விளாசல்

Irfan Pathan
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் பத்து வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா தவற விட்டது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது.

இந்த தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் அந்த ஒரு இன்னிங்ஸ் தவிர்த்து மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி அவுட்டானது ரசிகர்களை கடுப்பேற்றியது.

- Advertisement -

சச்சினை விட பெருசா:

இந்நிலையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் கூட 2013 ரஞ்சிக் கோப்பையில் விளையாடியதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஆனால் 2012க்குப்பின் விராட் கோலி ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். அதுவே விராட் கோலியின் தடுமாற்றத்திற்கு காரணமாக இருப்பதால் அவரை நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் பதான் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2024இல் போட்டிக்கு அடித்தளம் இடக்கூடிய முதல் இன்னிங்ஸில் விராட் கோலி வெறும் 15 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். அதுவே கடந்த ஐந்து வருடங்களில் அவர் 30 கூட தாண்டவில்லை. இது போன்ற ஆட்டத்தை தான் சீனியர் வீரரிடம் இருந்து இந்திய அணி எதிர்பார்க்கிறதா?”

- Advertisement -

பதான் விமர்சனம்:

“அவருக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள். இளம் வீரர்கள் சுமாராக விளையாடினாலும் அவர்கள் வருங்காலத்திற்கு தயாராவார்கள். கடைசியாக விராட் கோலி உள்ளூரில் எப்போது விளையாடினார்? (2012இல்). அவர் உள்ளூரில் விளையாடி ஒரு தசாப்தம் முடிந்து விட்டது. சச்சின் டெண்டுல்கர் கூட சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய பின்பு தான் ஓய்வு பெற்றார்”

இதையும் படிங்க: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றி குறித்து பாராட்டி – கம்பீர் பேசியது என்ன?

“இங்கே நாம் விராட் கோலியை அவமதிக்கவில்லை. மிகவும் சிறப்பாக விளையாடிய அவர் நிறைய ரன்கள் அடித்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் தற்போது அவர் ஒரே தவறை செய்கிறார். இத்தனைக்கும் சுனில் கவாஸ்கர் அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டினார். ஆனாலும் அவர் அந்த தவறுகளை திருத்தம் செய்வதற்கு எந்த கடின முயற்சியும் செய்வதாக தெரியவில்லை” எனக் கூறினார்.

Advertisement