ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்ற வருகிறது. அந்தப் போட்டியில் முதல் நாள் மாலை வேளையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தினார். அதனால் ஏமாற்றமடைந்த இந்திய கேப்டன் பும்ரா என்னவாயிற்று என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அப்போது எதிர்புறம் இருந்த சாம் கோன்ஸ்டஸ் தேவையின்றி பும்ராவிடம் வம்பிழுத்தார். அதற்கு பும்ராவும் பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார். அடுத்த சில பந்துகளில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அப்படியே திரும்பி அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். அப்படியே இந்திய அணியினரும் சாம் கோன்ஸ்டஸ்க்கு சரியான பதிலடி கொடுத்தனர்.
பும்ராவிடம் எதுக்கு:
இத்தனைக்கும் 19 வயதாகும் அவர் கடந்த போட்டியில் தான் அறிமுகமாகி பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டார். அப்படி எதிர்கொண்டு விட்டு ஃபெவிலியன் திரும்பியதும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது பும்ராவை அடிப்பேன் என்று அவர் சவால் விட்டார். இந்நிலையில் பும்ரா போன்ற தரமான வீரர்களிடம் சாம் கோன்ஸ்டஸ் மோதுவது சரியான விஷயம் அல்ல என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் வாக் எச்சரித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மற்றுமொரு ஓவரை எதிர்கொள்ள விரும்பாததால் உஸ்மான் கவாஜா அதை செய்தார் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த நேரத்தில் கோன்ஸ்டஸ் அதில் ஈடுபட்டார். இது அவருடைய அப்பாவியான உற்சாகமா அல்லது ஜூனியராக எப்போதும் தாம் விளையாடிய விளையாட்டின் விதமா என்று எனக்குத் தெரியவில்லை”
டார்கெட் ஆகிடுவீங்க:
“அவர் அதிக விளையாட்டில் ஈடுபட விரும்புகிறார். ஆனால் உண்மையில் சாம் அங்கு அப்படி ஈடுபட வேண்டிய அவசியமில்லை. உண்மையில் அவர் தனது நாக்கை கொஞ்சம் கடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு அங்கு எந்த தொடர்பும் இல்லை. சொல்லப்போனால் அவர் கவாஜாவின் கவனத்தை சீர்குலைத்தார். எனவே இதிலிருந்து அவர் கற்றுக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: மிரட்டிய இந்திய அணிக்கு ஐசிசி தண்டனை கொடுக்கனும்.. இல்லனா நாங்களும் செய்வோம்.. ஆஸி கோச் விமர்சனம்
“அதை விட்டுவிட்டு இப்படியே நடந்து கொண்டால் தனது கேரியர் முழுவதிலும் எதிரணியின் இலக்காக நீங்கள் மாறிப் போவீர்கள். உண்மையில் அந்த இடத்தில் அவர் எதிரணியையும் பும்ராவையும் பற்ற வைத்தார். நீங்கள் அதை செய்திருக்க வேண்டியதில்லை. அவர் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். திறமை இருந்தால் பேட்டை பேச அனுமதிக்க வேண்டுமென்று அறிவுறுத்துவேன்” எனக் கூறினார்.



