ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
முன்னதாக அந்த போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 14 (30) ரன்கள் எடுத்து நங்கூரமாக விளையாடினார். அப்போது கமின்ஸ் வீசிய பவுன்சர் பந்தை லெக் சைட் திசையில் அடிக்க முயற்சித்த அவர் தவற விட்டார். அதை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடித்து அவுட் கேட்ட போதிலும் களத்தில் இருந்த நடுவர் கொடுக்கவில்லை.
உருட்டல் தீர்ப்பு:
அதே சமயம் கமின்ஸ் அவுட் என்று உறுதியாக இல்லை. ஆனாலும் அலெக்ஸ் கேரி சொன்ன காரணத்தால் அவர் ரிவ்யூ எடுத்தார். அதை சோதித்த மூன்றாவது நடுவர் அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் ஸ்பைக் தெரிந்ததால் வாஷிங்டன் சுந்தர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் அதை எதிர்ப்புறம் இருந்து பார்த்த கேப்டன் பும்ரா “கடந்த போட்டியில் 3வது நடுவர் ஸ்னிக்கோவை பின்பற்றாமல் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுத்தார்”
“ஆனால் இன்று அதைப் பின்பற்றி அவுட் கொடுக்கிறார்” என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. அதாவது கடந்த போட்டியில் 82 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடிய ஜெய்ஸ்வால் இதே போல கீப்பர் திசையில் அடிக்க முயற்சித்தார். அப்போது ஸ்னிக்கோவில் ஸ்பைக் இல்லாத போதும் வெறும் கண்களால் பந்து பேட்டில் உரசி செல்வது தெரிவதால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார்.
பும்ரா அதிருப்தி:
அது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆனால் இப்போட்டியில் வெறும் கண்களால் பார்க்கும் போது வாஷிங்டன் சுந்தர் பேட் பந்தில் படாதது நன்றாக தெரிந்தது. இருப்பினும் இம்முறை கண்ணை நம்பாத 3வது நடுவர் அவுட் கொடுத்ததை பார்த்த பும்ரா இது என்ன உருட்டு என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: 2 தொடருக்காக ரோஹித்தை அவமானப்படுத்தாதீங்க.. அசாருதீன், மார்க் டெய்லரை விட மோசமில்ல.. சித்து ஆதங்கம்
அதே போல “இது அவுட்டாக இருக்க வழியில்லை. இது மோசமான முடிவு” என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இது மோசமான முடிவு சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்தியா வீரர் ராபின் உத்தப்பாவும் அது பற்றி ட்விட்டரில் நடுவருக்கு எதிராக அதிருப்தியுடன் பதிவிட்டுள்ளது குறிப்பிடப்பட்டது.



