மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72 ரன்கள் குவித்த உதவியுடன் 474 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தது. முன்னதாக அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமானார்.
அந்த வாய்ப்பில் நம்பர் ஒன் பவுலராக திகழும் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த வீரராக அவர் சாதனை படைத்தார். அத்துடன் பும்ராவுக்கு எதிராக ஒரே ஓவரில் (18) ரன்கள் குவித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார். அது போக ஆஸ்திரேலியாவுக்காக இரண்டாவது இளம் வயதில் அரை சதமடித்த (60) வீரராகவும் கோன்ஸ்டஸ் வரலாறு படைத்தார்.
பும்ராவுக்கு சவால்:
அந்த நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை இனிமேல் தொடர்ந்து தாம் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என்று அவர் கூறினார். அந்த வகையில் இதே போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரை இதே போல அதிரடியாக அடிப்பேன் என்றும் கோன்ஸ்டஸ் நம்பிக்கையான சவால் விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 12 வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் தாம் விளையாடுவதாக பும்ரா தெரிவித்துள்ளார்.
எனவே இதை விட பல அதிரடிகளை தாம் பார்த்துள்ளதாக தெரிவிக்கும் அவர் முதல் 2 ஓவரிலேயே கோன்ஸ்டஸை 6 – 7 முறை விக்கெட்டுக்கு நெருக்கமான பந்துகளை வீசியதாக கூறியுள்ளார். அதனால் விரைவில் அவரை அவுட் செய்வேன் என்று பும்ரா அடக்கத்துடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி பும்ரா பேசியது பின்வருமாறு.
கூலான பும்ரா:
“இது போன்ற பல அனுபவங்களை நான் பார்த்துள்ளேன். எனது வாழ்நாளில் கடந்த 12 வருடங்களாக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறேன். அவர் சுவாரஸ்யமான பேட்ஸ்மேன். நான் எப்போதும் போட்டியிலிருந்து தொலைவில் இருப்பதாக உணர்வதில்லை. எனக்கு விக்கெட் மிகவும் அருகில் இருக்கிறது என்றே உணர்வேன்”
இதையும் படிங்க: 5இல் போதுமா? ஸ்டுப்பிட் முட்டாள்.. இந்தியாவை இப்படியா கீழ விடுவ.. நேரலையில் பண்ட்டை விளாசிய கவாஸ்கர்
“முதல் 2 ஓவர்களில் 6 – 7 முறை விக்கெட் கிடைப்பது போன்ற சூழல்கள் இருந்தன. ஆனால் கிரிக்கெட் இப்படி தான் செல்லும். சில நேரங்களில் உங்களுக்கு அது கிடைக்காது. எனவே இது போன்ற வித்தியாசமான சவால்களை நான் விரும்புகிறேன். அதை நானும் எதிர்நோக்கி உள்ளேன்” என்று கூறினார். இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



