விராட் கோலி செய்த தவறால் சதம் அடிக்காமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஜெய்ஸ்வால் – என்ன நடந்தது?

Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா என இந்த தொடரானது தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

கோலியால் பறிபோன ஜெய்ஸ்வாலின் சதம் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நேற்று டிசம்பர் 26-ம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்ற ஒரு படி முன்னே சொல்லும் என்பதனால் இந்த போட்டி அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன் மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக தங்களது முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து பலமான நிலையில் உள்ளது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி அணியின் எண்ணிக்கை 8 ரன்களில் இருந்த போது ரோகித் சர்மாவும், 51 ரன்களில் இருந்தபோது கே.எல் ராகுலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இப்படி இந்திய அணி 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் அணியின் எண்ணிக்கை 153-ஆக இருந்தபோது ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்காட் போலந்து பந்தில் லெஃக் சைடில் பந்தை தள்ளிவிட்டு ஒரு ரன் ஓட முயற்சிக்க கோலி பந்தை மட்டுமே கவனித்து நின்றதால் ஜெய்ஸ்வால் முக்கால் வாசி தூரம் ஓடி வந்து விட்டார்.

இதையும் படிங்க : இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததில்லை.. எல்லாத்துக்கும் ரோஹித் தான் காரணம்.. எம்எஸ்கே பிரசாத் விளாசல்

இதன் காரணமாக அவரால் மீண்டும் திரும்பி கிரீஸிற்கு செல்ல முடியாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். இப்படி அனுபவ வீரரான விராட் கோலியின் தவறால் 112 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 82 ரன்கள் அடித்திருந்த ஜெய்ஸ்வால் சதம் அடிக்க முடியாமல் வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வெளியேறினார்.

Advertisement