இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததில்லை.. எல்லாத்துக்கும் ரோஹித் தான் காரணம்.. எம்எஸ்கே பிரசாத் விளாசல்

MSK Prasad
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 164-5 என திணறலாக விளையாடி வருகிறது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 82 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் ரோகித் சர்மா 3, விராட் கோலி 36, ராகுல் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

சுமாரான ரோஹித்:

அதனால் இன்னும் 310 ரன்கள் பின் தங்கியுள்ள இந்தியா இந்தப் போட்டியில் வெல்லுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இன்னிக்கு இந்தத் தொடரில் இந்தியா இவ்வளவு தடுமாறுவதற்கு ரோகித் சர்மாவின் சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக இருப்பதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். அவருடைய சுமாரான ஃபார்ம் கேப்டன்ஷிப்பில் எதிரொலிப்பதாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடருக்கு முன்பாக நாம் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினோம். அதில் பரிதாபகரமான தோல்வி கிடைத்தது. சொந்த மண்ணில் 3 அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தோம் என்பது இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே நடைபெறாத ஒன்றாகும். அதனால் ரோஹித் மிகவும் வரிசைப்படுத்தப்பட்டார். இங்கே அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை”

- Advertisement -

பேட்டிங், கேப்டன்ஷிப்:

“பும்ரா முதல் போட்டியில் இந்தியாவின் நன்றாக வழி நடத்தினார். பின்னர் மீண்டும் இங்கேயும் ரோஹித் சர்மா தலைமையில் பின்னடைவுகள் தொடர்கிறது. அது அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக நான் கருதுகிறேன். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது அவர் இங்கே இந்திய அணி வழி நடத்துவதில் தெளிவாக தெரிகிறது”

இதையும் படிங்க: விராட் கோலியை அப்படி சொன்னது தவறு தான் மன்னிச்சுடுங்க.. 75 வயதாகும் முன்னாள் ஆஸி வீரர் வருத்தம்

“ஏனெனில் பல தருணங்களில் அவர் துடிதுடிப்பாக இல்லை. இந்த போட்டியிலேயே சாம் கோன்ஸ்டஸ் வெளுத்து வாங்கிய போது சிராஜ், பும்ரா தொடர்ந்து 11 ஓவர்கள் வீசினார்கள். அங்கே ஏதேனும் மாற்றத்தை செய்திருக்க வேண்டும். அந்த வகையில் ரோகித் சர்மா பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் ஆகிய இரண்டிலுமே தடுமாறி வருகிறார்” என்று கூறினார். இதன் காரணமாக ரோகித் சர்மாவும் விரைவில் ஓய்வு பெறுவதற்கான சூழல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement