இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிரிஸ்பேன் நகரில் கலந்து சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்த வேளையில் போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி காத்திருந்தது.
என்னுடைய கரியரில் நிறைவேறாத ஆசை :
அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார்.
இப்படி திடீரென தொடரின் பாதையிலேயே அஸ்வின் ஓய்வினை அறிவித்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தன்னுடைய கரியரில் தனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறது என அஸ்வின் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னுடைய கிரிக்கெட் கரியரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை அது மட்டும் தான் என்னுடைய கரியரில் நிறைவேறாத ஆசை என்று கூறியுள்ளார்.
அவர் கூறியது போலவே கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கோ, பாகிஸ்தான அணி இந்தியாவிற்கோ வந்து இருதரப்பு தொடர்களில் விளையாடாததால் அஸ்வினால் இறுதிவரை டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் போனது.
இதையும் படிங்க : நிதிஷ் ரெட்டியையும் அவரையும் ட்ராப் பண்ணிடாதீங்க.. இந்திய அணிக்கு பிரச்சனை வரும்.. கவாஸ்கர் பேட்டி
அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் பிரிஸ்பேன் போட்டியின் முடிவுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



