நிதிஷ் ரெட்டியையும் அவரையும் ட்ராப் பண்ணிடாதீங்க.. இந்திய அணிக்கு பிரச்சனை வரும்.. கவாஸ்கர் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் நித்திஷ் ரெட்டி நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

குறிப்பாக மெல்போர்ன் மைதானம் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல் ரவுண்டர்களை இந்தியா களமிறக்க விரும்புவதாக தெரிகிறது. அதே போல ரோகித் சர்மா துவக்க வீரராக மீண்டும் களம் இறங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் காணப்படுகின்றன.

- Advertisement -

கவாஸ்கர் எதிர்ப்பு:

அதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வருவதற்காக நித்திஷ் ரெட்டியை நீக்க இந்திய அணி முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிகின்றன. ஆனால் நித்திஷ் ரெட்டியை நீக்குவது இந்திய அணியும் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே போல ஆகாஷ் தீப் நீக்குவதும் சரியான முடிவாக இருக்காது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்களால் நித்திஸ் ரெட்டியை நீக்க முடியாது. ஏனெனில் அவர் தான் நம்முடைய நான்காவது வேகப்பந்து வீச்சாளர். அதே போல நிதிஷ் ரெட்டி மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாடுவதையும் என்னால் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்த வரை அதே பிளேயிங் லெவன் மீண்டும் நான்காவது போட்டியில் விளையாட வேண்டும்”

- Advertisement -

அசத்திய நிதிஷ்:

“அல்லது ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட வேண்டும். ஆனால் கடந்த போட்டியில் ஃபாலோ ஆனிலிருந்து உங்களை காப்பாற்றிய அவரை நீங்கள் எப்படி நீக்க முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்தத் தொடரில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி முதல் 2 போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு போராடினார்.

இதையும் படிங்க: ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல்’ல இருந்தே இந்த பிரச்சனை இருக்கு.. கில், ரோஹித், கோலிக்கும் ஒரே தீர்வு சொன்ன ஆகாஷ் சோப்ரா

எனவே ராகுலுக்குப் பின் நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை நீக்குவது சரியான முடிவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதே போல ஹர்ஷித் ராணாவை விட ஆகாஷ் தீப் கடந்த போட்டியில் நன்றாக பந்து வீசினார். எனவே அவரும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

Advertisement