என்னோட முதல் போட்டியிலேயே அவரை எதிர்த்து விளையாட இருப்பது மகிழ்ச்சி – சாம் கோன்ஸ்டாஸ் வெளிப்படை

Sam-Konstas
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அந்த அணி இரண்டாவது போட்டியின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்து தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

அவரை எதிர்த்து விளையாட இருப்பது மகிழ்ச்சி :

அதனை தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் முதல் இன்னிங்சில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியே அந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டியின் பெரும்பாலான நேரம் மழை பெய்தால் அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து நாளை டிசம்பர் 26-ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த 19 வயதான துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் அறிமுகமாவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டு விட்டது.

ஏற்கனவே அந்த அணியின் துவக்க வீரராக விளையாடி வந்த மெக்ஸ்வீனி இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடி 6 இன்னிங்ஸ்களில் வெறும் 72 ரன்கள் மட்டுமே குவித்தார். இதன் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான சாம் கோன்ஸ்டாஸ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் அறிமுகமாக இருக்கும் அவர் இந்த போட்டிக்கு முன்னதாக தனது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடைய பந்துவீச்சை போதுமான அளவிற்கு பார்த்துவிட்டதால் அவரை சமாளித்து விளையாடும் அளவிற்கு தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடுவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

இதையும் படிங்க : மெல்போர்ன் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? – விவரம் இதோ

இந்த போட்டிக்காக வித்தியாசமாக எதையும் முயற்சிக்காமல் என்னுடைய திட்டங்களை எளிதாக வைத்துக்கொண்டு விளையாட விரும்புகிறேன். என்னுடைய சிறு வயதிலிருந்து ஆஸ்திரேலியா அணியின் பேகி கிரீன் தொப்பியை அணிந்து விளையாட வேண்டும் என்பது என் கனவு. அது நடக்கப்போவது மிகவும் பெருமையாக இருக்கிறது என சாம் கோன்ஸ்டாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement