81 சதங்களை ஒருநாள் விட்டுட்டு சச்சின் மாதிரி.. எம்சிஜியில் கோலி இதை செய்வார்ன்னு நம்புறேன்.. ஹைடன் அட்வைஸ்

Matthew Hayden
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 3 போட்டிகளின் முடிவில் 1 – * (5) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதை அடுத்து 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அப்போட்டியில் வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அசத்துவது அவசியமாகிறது. சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அவர் இத்தொடரின் முதல் போட்டியில் சதமடித்து வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அடுத்த போட்டிகளில் மீண்டும் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளில் அவரை எளிதாக ஆஸ்திரேலிய பவுலர்கள் அவுட்டாக்கி வருகிறார்கள்.

- Advertisement -

ஹைடன் அட்வைஸ்:

அதைத் தவிர்ப்பதற்காக 2004 சிட்னி போட்டியில் தமக்குப் பிடித்த கவர் டிரைவ் அடிக்காமலேயே சச்சின் டெண்டுல்கர் 241* ரன்கள் குவித்த டெக்னிக்கை விராட் கோலி பின்பற்ற வேண்டும் என்று ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், ஆடம் கில்கிறிஸ்ட் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதைக் கேட்காமல் விராட் கோலி மீண்டும் அப்படியே அவுட்டாகி வருகிறார்.

இந்நிலையில் இதுவரை அடித்துள்ள 81 சதங்களை விட்டுவிட்டு சச்சின் போல மெல்போர்ன் போட்டியில் விராட் கோலி விளையாட வேண்டுமென மற்றொரு ஜாம்பவான் மேத்தியூ ஹைடன் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஹைடன் பேசியது பின்வருமாறு. “அங்கே அற்புதமான வெற்றிகள், சுமாரான தோல்விகள் இருக்கலாம். அதாவது விராட் கோலி தன்னுடைய அற்புதமான கேரியரில் வெவ்வேறு சூழ்நிலைகளில் அடித்த சதங்களின் பட்டியலை நீங்கள் இடலாம்”

- Advertisement -

சச்சின் போல:

“ஆனால் எம்சிஜியில் (மேல்போர்ன்) விராட் கோலிக்கு நல்ல பேட்டிங் பிட்ச் கிடைக்கும். அங்கே தொடர்ச்சியாக களத்தில் இருப்பதற்கான வழியை அவர் கண்டறிய வேண்டும். குறிப்பாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒளிரக்கூடியது அவர் எதிர்க்க வேண்டிய ஒன்று. விராட் கோலி அற்புதமான கவர் ட்ரைவ் அடிக்கக்கூடியவர் என்பது எனக்குத் தெரியும். சச்சினும் அதை செய்யக்கூடியவர்”

இதையும் படிங்க: ரன்ஸ் அடிக்கலனாலும்.. ஆஸியில் விராட், ரோஹித் பாய் எங்களுக்கு இந்த ஹெல்ப் பன்றாங்க.. ஆகாஷ் தீப்

“ஆனால் அதை அவர் ஒரு நாள் முழுவதும் வெளியே வைத்தார். அதை “என்ன ஒரு அற்புதமான பேட்டிங்” என்று அன்றைய நாளில் களத்திலிருந்து நான் நேராகப் பார்த்தேன். அன்றைய நாளில் சச்சினிடம் இருந்து எனக்கு கேட்ச் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வகையில் சச்சின் கவர் டிரைவை ஒதுக்கி தனது ஆட்டத்தில் வேலை செய்து கால்களை அழகாக பயன்படுத்தி ஸ்பின்னர்களை அடித்து முன்னேற வேண்டிய இடத்தை முன்னேற்றினார். விராட் கோலிக்கும் அந்த ஆளுமை இருக்கிறது. அதை மெல்போர்னில் பார்ப்போம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement