ரன்ஸ் அடிக்கலனாலும்.. ஆஸியில் விராட், ரோஹித் பாய் எங்களுக்கு இந்த ஹெல்ப் பன்றாங்க.. ஆகாஷ் தீப்

Akash Deep
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சம நிலையில் இருக்கும் அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக இந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. இத்தனைக்கும் தற்போதைய இந்திய அணியில் இருப்பதிலேயே அவர்கள் தான் சீனியர்களாக இருக்கிறார்கள். அப்படி அனுபவத்தைக் கொண்டிருந்தும் அவர்கள் சுமாராக விளையாடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்து வருகிறது. அதன் காரணமாக 36 வயதைக் கடந்து விட்ட அவர்கள் பேசாமல் ஓய்வு பெறலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

அனுபவத்தால் உதவி:

இந்நிலையில் பெரிய ரன்கள் குவிக்காவிட்டாலும் ஜெய்ஸ்வால் மற்றும் தம்மை போன்ற ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடும் இந்திய வீரர்களுக்கு ரோஹித், விராட் கோலி அனுபவத்தை சொல்வதாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். மேலும் பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா அனுபவத்தை பகிர்வதாகவும் அவர் கூறியுள்ளார். அது ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு உதவுவதாக ஆகாஷ் தீப் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நான் முதல் முறையாக விளையாடுகிறேன். ஜஸ்ப்ரித் பும்ரா எனக்கு கொஞ்சம் உள்ளீடுகள் வழங்கியுள்ளார். அது எனக்கு நிறைய உதவி செய்கிறது. அவர் எனக்கு சிக்கலான விஷயங்களை சொல்வதில்லை. அந்த தெளிவு எனக்கு உதவுகிறது. குறிப்பாக பிட்ச்சில் அதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் சொன்னார்”

- Advertisement -

இந்தியா கம்பேக் கொடுக்குமா:

“அது எனக்கு நன்றாக பந்து வீசுவதற்கு உதவுகிறது. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடும் போது நாங்கள் புதியவர்களாக இருப்பதாக தெரியவில்லை என்பது உண்மை. ஏனெனில் எங்கள் பவுலர்களுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அவர்களுடைய அனுபவத்தையும் கருத்துக்களையும் தொடர்ந்து எங்களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்தப் பெருமை அவர்களைச் சேரும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நான் எதுமே சொல்ல தேவையில்லை.. அவருக்கே எல்லா தெரியும்.. பும்ராவை பாராட்டி தள்ளிய – ரோஹித் சர்மா

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியா கடைசி 2 போட்டிகளில் நன்றாக வேண்டிய நிலையில் உள்ளது. மறுபுறம் அனுபவம் கொண்ட விராட் கோலி, ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே தங்களுடைய கடைசி தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாட இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்ற வேண்டியது அவசியமாகிறது.

Advertisement