யார் இந்த தனுஷ் கோட்டியான்? இந்திய அணியில் அவர் இடம்பிடிக்க என்ன காரணம்? – விவரம் இதோ

Dhanush-Kotian
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு நாடு திரும்பினார்.

யார் இந்த தனுஷ் கோட்டியான் :

திடீரென ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவித்து வரும் வேளையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக மும்பையை சேர்ந்த ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்தது.

- Advertisement -

மேலும் அவர் பாக்சிங் டே போட்டிக்கு முன்னதாக மும்பையில் இருந்து மெல்போர்ன் சென்றடைவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளளர்களான குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரை தாண்டி தனுஷ் கோட்டியான் இடம் பிடிக்க என்ன காரணம்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

குல்தீப் யாதவ் ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் அவர் என்னும் முழுமையாக உடற்தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அக்சர் பட்டேலுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது என்பதனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் குடும்பத்துடன் இருக்க நினைப்பதால் அவரும் ஆஸ்திரேலியா பயணிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாகவே அண்மையில் நடைபெற்ற முடிந்த ரஞ்சி தொடரில் அசத்திய 26 வயதான இளம் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற் பந்துவீச்சாளரான அவரால் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்பதன் காரணமாகவே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தம்பி இது ஆஸ்திரேலியா.. தப்பான நினைப்பை மாத்திக்கிட்டு இதை செய்ங்க.. சுப்மன் கில்லுக்கு பாண்டிங் ஆலோசனை

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ரஞ்சி தொடரில் மொத்தமாக 29 விக்கெட்டுகளையும், 502 ரன்களையும் எடுத்த அவர் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement