ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்ப்ரோன் நகரில் துவங்குகிறது. அந்தப் போட்டியில் இந்தியா கம்பேக் கொடுத்து இத்தொடரையும் வெல்வதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்தத் தொடரில் இதுவரை ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். அதிலும் முதல் போட்டியில் கேப்டனாக 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் 2வது போட்டியில் ரோகித் தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்தது.
தனியாளாக காக்கும் பும்ரா:
3வது போட்டியிலும் இன்னிங்ஸை தோல்வியை தவிர்க்க போராடியாக இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் ஆகாஷ் தீப்புடன் சேர்ந்து 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பும்ரா ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். அந்த வகையில் பும்ரா மட்டும் இல்லையென்றால் முதல் போட்டியில் தோற்று இந்நேரம் இத்தொடரில் இந்தியா வீழ்ந்திருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
எனவே அவருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய பெரிய வீரர்கள் 4வது போட்டியில் தூங்காமல் விழித்து சுதந்திரமாக விளையாடி கை கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். அதை செய்தாலே பிரச்சனைகளை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியை ராசியான மெல்போர்னில் தோற்கடிக்கலாம் என்று சாஸ்திரி கூறியுள்ளார். ஏனெனில் அம்மைதானத்தில் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.
தூங்காம கைகொடுங்க:
இது பற்றி ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை தனி ஒருவனாக தற்காத்து வருகிறார். எனவே இந்திய அணியின் பெரிய பையன்கள் விழித்துக் கொண்டு களத்தில் களமிறங்க வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற தைரியமான நம்பிக்கை எனக்கு உள்ளது. அதை செய்தால் ஆஸ்திரேலியா தங்களுடைய கையில் பிரச்சினையை கொண்டிருக்கும்”
இதையும் படிங்க: கேமரா இருந்ததால் முடியாதுன்னு சொல்லிட்டாரு.. ஸ்மித்தின் சீட்டிங்கை அஸ்வின் உடைத்தது பற்றி.. கைப் வியப்பு
“ஆம் இந்திய அணி அடைக்கப்பட்ட சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக வரவில்லை. இருப்பினும் மெல்போர்னில் அவர்கள் சுதந்திர பறவைகள். எனவே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அவர்கள் ஆஸ்திரேலியாவை வந்து தாக்கலாம்” என்று கூறினார். இதற்கிடையே 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியா கடைசி 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



