மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அசவுகரியம்.. ஆஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

Hazlewood
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையினை பொறுத்தவரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகிய வீரர் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கும் இந்த “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியானது உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை வைத்துள்ளது.

- Advertisement -

எப்போதுமே “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி என்றால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் வேளையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்க இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டி என்பதனால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான பதினைந்து பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஜாஷ் ஹேசல்வுட்டிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய பல வாரங்கள் ஆகும் என்பதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அவர் வெளியேறியுள்ள அவர் மீண்டும் அணிக்கு திரும்ப தாமதமாகும். அதன் காரணமாக அவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்காட் போலந்து எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல.. ப்ரித்வி ஷா நீக்கப்பட இதுதான் காரணம் – மும்பை வாரியம் தகவல்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே பந்துவீச்சில் அசவுகரியத்தை உணர்ந்த அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்தது தெரியவந்ததால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement