80 ரன்ஸ்.. அம்பயரின் அரிதான முடிவால்.. வெ.இ அணிக்கு எதிராக வங்கதேசம் வரலாறு காணாத வெற்றி

WI vs BAN
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தது. அதற்கடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.

அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் ஆரம்பத்திலேயே வென்ற நிலையில் 3வது போட்டி டிசம்பர் 20ஆம் தேதி கிங்ஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 189-7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அரிதான நிகழ்வு:

அதிகபட்சமாக ஜாகிர் அலி அதிரடியாக 72* (41), பர்வேஸ் ஹொசைன் 39 (21) ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ரொமாரியா செபார்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த இன்னிங்ஸில் ராஸ்டன் சேஸ் வீசிய 15வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட ஜாகிர் அலி டபுள் ரன்கள் எடுக்க முயற்சித்தார்.

அதற்குள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பந்தை தடுத்து எடுத்துப் போட்டதால் எதிர்புறம் இருந்த சமீம் ஹொசைன் ஓடுவதை நிறுத்தி விட்டார். ஆனால் மறுபுறம் ஜாகிர் அலி வேகமாக ஓடி வந்ததால் 2 பேட்ஸ்மேன்களும் ஒரே பக்கம் நின்றார்கள். அதை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் எளிதாக ரன் அவுட் செய்தது. அப்போது ஜாகிர் அலி தாம் அவுட் என்று நினைத்துக் கொண்டு ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

வங்கதேசம் வெற்றி:

ஆனால் அதை சோதித்த போது ஜாகிர் அலி முதலாவதாக வெள்ளைக்கோட்டை தொட்டதும் ஷமிம் ஹொசைன் கால் மற்றும் பேட் காற்றில் இருந்தது தெரிய வந்தது. அதனால் 17 ரன்களில் பெவிலியன் திரும்பிய ஜாகிர் அலியை மீண்டும் களத்திற்கு அழைத்த நடுவர்கள் 2 ரன்களில் இருந்த ஷமிம் ஹொசைனை அவுட் என்று அறிவித்தார்கள்.

பொதுவாக இது போன்ற தருணங்களில் பேட்ஸ்மேன் பவுண்டரியை தாண்டி விட்டால் மீண்டும் மைதானத்திற்குள் வந்து விளையாட முடியாது என்பது விதிமுறையாகும். ஆனால் இந்த இடத்தில் அரிதாக நடுவர்களே ஜாகிர் அலியை மீண்டும் அழைத்து விளையாட வைத்தனர். அதை பயன்படுத்திய அவர் 72* ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஏனெனில் பின்னர் 190 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் சுமாராக விளையாடி 16.4 ஓவரில் 109க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: ஹார்ட் அட்டாக்கே வந்துருக்கும்.. சச்சின், கபில் தேவ் ஸ்க்ரீட்ஷாட் வாழ்த்தை பகிர்ந்த அஸ்வின்.. கோலிக்கும் பதில்

அதிகபட்சமாக ரொமாரியா செபார்ட் 33 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக ரிசாத் ஹுசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 என்ற கணக்கில் இத்தொடரை வென்றது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் முறையாக வங்கதேசம் ஒயிட் வாஸ் வெற்றியை பதிவு செய்து வரலாறு காணாத சாதனை படைத்தது.

Advertisement