இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாபெரும் சாதனை மைல்கல் ஒன்றினை எட்டி வரலாறு படைத்துள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிஷப் பண்ட் நிகழ்த்திய மாபெரும் சாதனை :
அந்த வகையில் டிசம்பர் 14-ஆம் தேதி நேற்று துவங்கிய இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 405 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணி சார்பாக பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கவாஜாவின் கேட்சை பிடித்ததன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அந்த சாதனை யாதெனில் : கவாஜாவின் கேட்சசை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்த மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேந்திர சிங் தோனி 256 கேட்ச்கள் மற்றும் 38 ஸ்டம்பிங்கள் என 294 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து சையத் கிர்மானி 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங் என 198 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : இப்படியா வேஸ்ட் பண்ணுவ.. தெரிஞ்சே தவறு செய்த ஆகாஷ் தீப்பை கடுமையாக சாடிய ரிஷப் பண்ட் – என்ன நடந்தது?
அவர்களுக்கு அடுத்து தற்போது ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் பிடித்த 3 கேட்ச்கள் மூலம் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 137 கேட்ச் 15 ஸ்டம்பிங் என 152 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



