இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே எப்பொழுதும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் காரசாரமாக மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, ஒருவரைர் ஒருவர் சீண்டுவது என அங்கு நடக்கும் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்க்கும்.
ஆகாஷ் தீப்பை சாடிய ரிஷப் பண்ட் :
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்றும் அது போன்ற ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த நிகழ்வு இந்திய வீரர்களுக்குள்ளே நடைபெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் ஆகாஷ் தீப்பை கடுமையாக சாடிய சம்பவம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 75 ரன்கள் 3 விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறி வந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்டது.
அவ்வேளையில் போட்டியின் 50-வது ஓவரை வீசிய ஆகாஷ் தீப் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித்க்கு எதிராக ஒரு அற்புதமான பந்தை வீசி இருந்தார். அந்த பந்து பேட்டில் படாமல் கால்களில் அடித்தது. அப்போது அவர் அம்பையரிடம் அந்த பந்திற்கு விக்கெட் கேட்டார். ஆனால் அம்பயர் தர மறுத்துவிட்டார். அந்த பந்து லெஃக் சைடில் சென்றது தெளிவாகத் தெரிந்தது.
அந்த நேரத்தில் ரோகித் சர்மாவை அனுகிய ஆகாஷ் தீப் ரிவியூ எடுக்கலாம் என்று கூறினார். ரோகித் சர்மாவும் யோசிக்காமல் ரிவியூ எடுத்தார். ஆனால் ரிப்ளேவில் பந்து லெக்ஸ் ஸ்டம்பை விட்டு விலகியது தெரியவந்தது. இதனை கவனித்த ரிஷப் பண்ட் ஏற்கனவே நான் சொன்னேன் அல்லவா வந்து லெஃக் சைடில் சென்றது என்று, எதற்காக ஒரு ரிவ்யூவை வீணடிக்கிறாய்?
இதையும் படிங்க : 5 விக்கெட்ஸ்.. தனியாளாக போராடும் இந்தியாவின் துருவ நட்சத்திரம் பும்ரா.. கபில் தேவை முந்தி 2 மகத்தான சாதனை
தெளிவாக தெரிந்தும் இப்படி ஒரு ரிவ்யூவை வீணடிப்பது தவறு என்று கடினமாக அவரை சாடினார். பொதுவாகவே விக்கெட் கீப்பர்களுக்கு பந்து எந்த இடத்தில் படுகிறது? எங்கு செல்கிறது என்று தெரியும். அந்த நேரத்தில் அவரை கேட்காமலே ரிவ்யூவிற்கு சென்றதால் ரிஷப் பண்ட் ஆகாஷ் தீப் மீது கோபத்தை காண்பித்தது குறிப்பிடத்தக்கது.



