5 விக்கெட்ஸ்.. தனியாளாக போராடும் இந்தியாவின் துருவ நட்சத்திரம் பும்ரா.. கபில் தேவை முந்தி 2 மகத்தான சாதனை

Jasprit Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் தலைமையில் மோசமாக விளையாடிய இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது.

அந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காபாவில் துவங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது நாள் முடிவில் 405-7 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 21, மெக்ஸ்வீனி 9 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா வேகத்தில் அவுட்டானார்கள்.

- Advertisement -

இந்தியா திணறல்:

மார்னஸ் லபுஸ்ஷேன் 12 ரன்களில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் அவுட்டானார். அதை அடுத்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்த டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாசி பும்ராவிடம் அவுட்டானார். 535 நாட்கள் கழித்து சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களில் பும்ரா வேகத்தில் சிக்கினார்.

அடுத்து வந்த மிட்சேல் மார்ஷை 5 ரன்களில் காலி செய்த பும்ரா 5* விக்கெட்டுகளை எடுத்து துருவ நட்சத்திரத்தைப் போல தனி ஒருவனாக இந்தியாவுக்கு போராடி வருகிறார். களத்தில் கேரி 45*, ஸ்டார்க் 7* ரன்களுடன் உள்ளார்கள். தற்சமயத்தில் இந்தியா இந்தப் போட்டியில் மழை வரவில்லையெனில் தோல்வியை சந்திக்கவே பிரகாசமாக உள்ளது

- Advertisement -

மகத்தான பும்ரா:

இந்தப் போட்டியையும் சேர்த்து தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக சேனா நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா: 8*
2. கபில் தேவ்: 7
3. ஜஹீர் கான்/பி சந்திரசேகர்: தலா 6

இதையும் படிங்க: ஆஸி 407 ரன்ஸ்.. ஹெட் 14க்கு 14.. ரோஹித் படுமோசமான கேப்டன்ஷிப்.. இந்தியாவை மழை காப்பாற்றுமா?

மேலும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் ஜஸ்ப்ரித் பும்ரா 11வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் வெளிநாட்டு போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் மற்றுமொரு புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா: 11*
2. கபில் தேவ்: 10
3. அனில் கும்ப்ளே: 9
4. இஷாந்த் சர்மா/பி சந்திரசேகர்: தலா 8

Advertisement