இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. இதை அடுத்து மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா மைதானத்தில் துவங்க உள்ளது.
2வது போட்டியில் மிகவும் சுமாராக விளையாடிய இந்தியா இரண்டரை நாட்களில் தோல்வியை சந்தித்தது. அதனால் அங்கிருந்து மீண்டு வந்து இந்திய அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது. குறிப்பாக முன்னின்று அசத்த வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் தவிப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
ரவி சாஸ்திரி ஐடியா:
இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை போல அங்கே ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவை ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்படி ரோஹித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்தால் இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாவது போட்டியில் வென்றால் தொடரையும் வென்று இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓப்பனிங்கில் தான் ரோகித் கடந்த 8 – 9 வருடங்களாக அசத்தி வருகிறார்”
பஞ்ச் கொடுக்கனும்:
“மிடில் ஆர்டரில் அவரால் நெருப்பாக விளையாட முடியாது என்று அர்த்தமில்லை. ஆனால் ஓப்பனிங் தான் அவருக்கு நன்றாக இருக்கும். ஒருவேளை அங்கே ஆரம்பத்திலேயே அவர் ஆஸ்திரேலியாவுக்கு முதல் பஞ்ச் கொடுத்து டேமேஜ் செய்தால் நிலைமை மாறும். அதை செய்வதற்கு ஓப்பனிங் தான் அவருக்கு சிறந்த இடம். இந்தியா தங்களுடைய நிலைமையை இங்கே மதிப்பிடுவது முக்கியம்”
இதையும் படிங்க: 140 கோடின்னா இப்படித்தான்.. அவர் இருந்திருந்தா ஆஸி தெறிக்கும்.. பணிந்த இந்தியா பற்றி ஆசாத் பேட்டி
“ஏனெனில் 1 – 1 என்ற கணக்கில் இருக்கும் இந்தத் தொடர் முன்னோக்கி செல்லும். என்னைப் பொறுத்த வரை மூன்றாவது போட்டியில் வெல்பவர்களே இந்தத் தொடரையும் வெல்வார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்தியா தங்களுடைய சமநிலையை சரியாக உருவாக்குவது அவசியம். ஏனெனில் இங்கிருந்து வெல்வதற்கான தன்னம்பிக்கையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளார்கள்” என்று கூறினார்.



