ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது.
அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முன்னதாக இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சுமாராக விளையாடியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் அவருக்கு பதிலாக பேசாமல் பும்ரா கேப்டனாக இருக்கலாம் என்று இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
ரோஹித்துக்கு ஆதரவு:
இந்நிலையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இப்படி ஒரு தோல்வியை சந்திக்கும் போது பலரும் வல்லுனர்களாக மாறி விமர்சிப்பதாக ரோஹித் சர்மாவுக்கு 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஷமி இருந்திருந்தால் பும்ராவுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா தெறிக்க விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் 2 அணிகளுமே குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனார்கள். பின்னர் பிட்ச் நன்றாக மாறியதும் பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடினார்கள். எனவே கிரிக்கெட் என்பது எப்போதும் யாராலும் கணிக்க முடியாத ஒரு விளையாட்டு. ஆனால் நம்முடைய இந்த இந்திய அணி கம்பேக் தொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்”
கம்பேக் கொடுக்க போராடுங்க:
“முகமது ஷமியை மட்டுமே நாம் தவற விடுகிறோம். ஒருவேளை அவர் பும்ராவுடன் இருந்திருந்தால் நம்முடைய பவுலிங் அட்டாக் ஆஸ்திரேலியாவுக்கு கொடியதாக இருந்திருக்கும். இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது என்று சொல்வதை விட ஆஸ்திரேலியாவிடம் அடிபணிந்தது போல இருந்தது. ஆஸ்திரேலியாவும் இப்படி கம்பேக் கொடுக்கக்கூடிய அணியாகும்”
இதையும் படிங்க: இதுவரை நான் மட்டுமே அவுட்டாகல.. உலகின் சிறந்த பும்ராவை அடிக்க இதான் வழி.. மிட்சேல் மார்ஷ் பேட்டி
“அவர்கள் மிகவும் கடினமான எதிரணி. எனவே கடினமாக போராடினால் தான் அவர்களை காபாவில் நடைபெறும் அடுத்த போட்டியில் பின்னே தள்ள முடியும். நம்முடைய நாட்டில் யாராவது நன்றாக விளையாடவில்லையெனில் உடனே அவரை நீக்க வேண்டும் தோல்வியை சந்தித்தால் கேப்டன்ஷிப் பறிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுவது வேடிக்கையான விசயமாகும். 140 கோடி மக்கள் இருந்தால் இது தான் பிரச்சனை. ஏனெனில் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும் அவர்கள் ஒவ்வொருவரும் வல்லுனர்களாக உருவெடுக்கிறார்கள்” என்று கூறினார்.



